| நபிகளின் இல்லத்தில் நந்தா விளக்கு ! O நபிகள்-நாயனை நினைத்தார்... துன்பக் கற்களை நடந்தே கடந்தார். O மக்கா நகரின் மணிப்புறாக்களெல்லாம் அவரை விழிகளுக்குள் விழுத்தாட்டிக் கொண்டன ! O இமைகள் படபடக்கிற போதெல்லாம்... இருநூறு படங்கள் ; இதயத்தின் இருட்டில் கழுவப்படாமலே - அவை காவலில் வைக்கப்பட்டன ! O அந்தக் கோதுமை மேனியை பார்த்த குருவிகளுக்கே குதூகலம் வந்தது ! |