| அந்தப் பளிங்கு உடலின் பச்சை நரம்புகளைப் பார்த்து... பூக்கள் - புஷ்பவதிகளாயின ! O குயில்கள் கூடுகட்டத்தொடங்கின ! O மான்களுக்கு மசக்கை வந்தது ! O குளிரில் வியர்த்த குமரிகளை இரவு இளக்காரமாகப் பார்த்தது - O தூரத்திலேயே நபிகளின் அழகினை நகரத்துப் பெண்கள் வசியக்கண் ஊசிகளால் வடித்தெடுத்து விட்டார்கள் ! |