பக்கம் எண் :

38 வலம்புரி ஜான்


O

இது

இற்றுப்போன இரும்புக்கு

பண்டமாற்றாக

பேரீச்சம்பழங்களை

இடது கையால்

தந்துவிட்டுப் போகிற ...

தர்மபுத்திரர்களின்

தாருகாவனம்

O

இது

நோன்பிருக்கிற

மேகங்களுக்கு எதிராக

கோழிவிதைகளைக்

கொத்திக் கொண்டிருக்கிற ...

இடதுபக்கம்

திரும்பிப்படுக்க இயலாத

இந்தியாவின் அரசியல்கட்சி

O

இந்தப்பாலைவனம் ...

சூரியச் செலவாளியிடமிருந்து

நதிகளைச்சேமித்து வைத்திருக்கும்

மண்வங்கிகளின் மைதானம்

O

இது-

நீர்த்தவளைகளின்

நிரந்தர வெளிநடப்பு