பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்37


அதோ அந்தப் பாலைவனம் ...

மணல் வரிக்கவிதை

O

இது

அரேபியப் பாலைவனம்.

சூரியச்சேவல்-தனது

நெருப்பு வயிற்றை

நிரப்புவதற்காக ...

நீர்முத்துக்களைக்

கொத்தி எடுப்பது-இங்கே

எப்போதும் நடப்பது.

O

இந்த

நிழல் நாடகத்தின்

நிரந்தர ஒத்திகைக்கு ...

இங்குதான்

கால்களைக்கழற்றி விட்டு

சலங்கைகளைக் கட்டுகிறார்கள்.

O

இது

நிச்சயமின்மையை

உடுத்திக் கொண்டிருக்கிறது ...

நித்தியத்தைக்

கிழித்துக்கொண்டே இருக்கிறது.