பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்387


அண்ணல்

எழுபது பேர்களோடு

 

 

பகைவர்களைப்

பின்தொடர்ந்தார்.

அபூசுப்யான்

ஓட்டப்பந்தயத்தில்

முதற்பரிசு பெற்றார்.

 

O

 

தற்காப்புப் போர் என்ற

அண்ணலின் கட்டளையைத்

தகர்த்ததினால்

சவ இமயங்களைச்

சந்திக்க நேர்ந்தது என்று

மதீனா வாசிகள்

உணர்ந்தனர்.

 

O

 

அண்ணல்

அரசரானார்.

வெற்றி இன்றேல்

வீர சொர்க்கம் -

அண்ணலின் மீது

தீர்ப்பு திணிக்கப்பட்டது.

 

O

 

வெற்றிகள் அவரது

காலடியில் வீழ்ந்தன ;

ஆனால்

அவரது கரண்டைக்கால்களுக்கு

மேலே...

அவைகளால்

ஏறிச் செல்ல

இயலவில்லை!

      

       *