பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்389


இஸ்லாத்திற்கா வரும் இறுதி?  

 

O

 

வெற்றிக்கு விலாசம் எழுதிய

பத்ருப் போர்க்களம்

இஸ்லாமிய நெற்றியைச்சுற்றி

கீர்த்திக் கிரீடத்தை

வளைத்து வைத்தது!

 

O

 

உகத் போர்க்களம்

கிரீடத்தின்

கிண்கிணி மணிகளைக்

கீழே உதிர்த்தது!

 

O

 

இஸ்லாத்திற்கு

இறுதிவரவேண்டும் என்று

பகைவர்கள்

பொழுது பார்த்தனர்.

 

O

 

இவர்கள்

ஆடிப் போன பல்லை

எடுத்தே

அரண்மனைக்குத்

தூணாக்குகிறவர்கள்.

ஆனைத்தந்தம்