பக்கம் எண் :

390 வலம்புரி ஜான்


வெளிச்சத்தின் அம்மாதான்

இருட்டு என்கிற விபரத்தை

நாயகம் நவின்றார்!

 

O

 

வதந்திகளின்

விலா எலும்புகளை

வீழ்த்துவதற்கே

வள்ளலுக்குப்

பொழுது போதுமானதாக இல்லை.

 

O

 

இதயமில்லாத

இரண்டுகால் நபி ஒருவன்

இஸ்லாத்தைப் பரப்ப

இறைமார்க்கம் அறிந்தோரை

இன்றே அனுப்புங்கள் என்றான்.

 

O

அண்ணலுக்கோ அய்யம் ;

எனினும் உயிர்களுக்கு

உறுதி உரைத்ததால்

கடிதக் காவலோடு

அனுப்பினார்கள்.

 

O

 

அந்த

எழுபது முஸ்லிம்களில்