இருவர்தவிர அனைவரும் உயிர்களை இழக்க நேர்ந்தது. O பிழைத்தவரில் ஒருவர் பிடரியில் குதிங்கால் நரம்பு பின்னலிட ஓடிவந்தார். பகைவர் இருவரைப் பார்த்தார். சினத்தீ படர்ந்தது. ஈக்கள் இரண்டும் இற்று விழுந்தன. O அபயப்பத்திரம் பெற்ற இருவரை ஆத்திரம் அழித்தது- அறிந்தார் அண்ணல் உள்ளம் பதைத்தார். O தலைவர்களை இழந்த குடும்பங்களுக்கு இழப்புத்தொகை தந்தார். இழப்புத்தொகையை இடுப்பில் சொருகிக்கொண்டு கொலைகளைச் செய்துவிடுகிற கொள்ளைக்கார அரசாங்கங்கள், நபிகளின் செயல்களைப் பார்த்தால் நாணத்தான் வேண்டும்! |