O
இது-
முள்ளம் பன்றிகளை
மரத்திலும் ...
பலாப் பழங்களைத்
தரையிலுமாக ...
இடம் மாற்றி விடுகின்ற
இதயமில்லா மந்திரவாதி
O
இது-
அம்மாவின்
எதிர்ப்பதம்.
O
அவள்-
பந்தைக்
தள்ளித் தள்ளி வைப்பாள் ...
தாவிவரட்டும்
தளிர் என்பதற்காக
இது-
கானல் நீரைக்
கடைசி வரைக்கும்
கண்ணிலே காட்டாத...
அடிவானக் கிழவியின்
அகலக் கால் நீட்டல்.
O
ஆகவே இது
அம்மாவின் எதிர்ப்பதம். |