பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்455


மக்காவிற்கு

அணிவகுத்தார்கள்.

 

O

 

வானவில்லின்

வண்ணத்துண்டுகள்

வளர்ந்தே நீண்டன.

 

O

 

கனவு பூமியாம்

கடவுள் ஆலயம்

கஃபாவை...

 

O

 

அண்ணல் பூ

அரக்காம்பல் வாயவிழ்ந்த

இல்லத்தை...

 

O

 

காதல் மனைவி

கதீஜாவோடு

குடும்பம் நடத்திய

கோமேதக மண்டபத்தை.

 

O

 

இறைவாக்கு

இறங்கியதால்

பூமிக்கு புல்லரிப்பு