முத்தலீஃப் கதை முடிந்தது ! O நாட்களுக்கு நரை விழுந்தது ... O அபுதாலீஃப், நாயகத்தின் அப்பா - அப்துல்லாவின் உடன் பிறந்த பெருமகன் உயிருக்குள் பொதிந்து உறவை வளர்த்தார். O முத்தலீஃப் என்ற முதுபெரும் மனிதர் கண்களை மூடினார் ! கனவாய் ஆயினார் : பழுத்த பழம் இது. ஓசையின்றி உதிர்ந்து விழுந்தது ! O விழுந்த பழமிது ... விருட்சத்தை அன்றோ அடைகாத்து நின்றது ! |