இவரது விரல்களை உலர்த்துவது தவறு. O முகம்மது மாதவச் செல்வர் மனத்தில் இருத்து. O அனாதைக் குழந்தை இது அன்பாய் வளர்த்துவா. O சிறுவர்களின் கனவுகளில் தலையணைக்குள்ளே தங்குகிற கலர்மிட்டாய் போல தூக்கம் கலையவும் கூடாது ; தலையணையைத் தூக்கவும் ஆகாது ! அப்படி வளர்த்து வா ! O முகம்மது அவர்கள் கன்னக்கதுப்பினில் மின்னித்திரிகின்ற கள்ளச் சிறு நகையாய் ... பொந்திலிருந்து இசைவெள்ளம் சிந்திடும் பூங்குயிலாய் ... வளர்ந்தார் ! |