பக்கம் எண் :

94 வலம்புரி ஜான்


அபுதாலீஃப் அரவணைப்பில் அருமைநாயகம்

   

O

 

 

அபுதாலீஃப்

பெற்ற குழந்தைகளைப்

பின்னுக்குத் தள்ளி விட்டு

தம்பி மகனான

தயாபரனுக்கே

தனி இடம் தந்தார் !

விளக்கு -

பக்கத்திலிருக்கும்

காற்றை விட்டு விட்டு

தள்ளி இருக்கும்

தகரத்தையே

சூடாக்குவதுபோல!

 

O

 

முகம்மது

அருகில் இன்றி

அபுதாலீஃப்

உண்ணமாட்டார் ...

 

O

 

மைக்காத் தகட்டில்

மயிலிறகு நடனம் போல்

தூக்கம் அவர் கண்ணில்

ஆட்டம் நடத்தவும் ...