இன்னொரு வணிகன், "மாலிக்கின் வார்த்தை ஏற்றிடத் தக்கதாய் இல்லை! பண்ணிடும் தொழிலில் கிடைத்திடும் பயனில் பங்குநம் அனைவர்க்கு முண்டு; தன்னொரு வருக்கே வாங்கிய இவனைத் தந்திடச் சொல்வதும் முறையோ? சின்னவ னிவனை விற்றிடில் லாபம் திரண்டிடும் அதிகமாய்!"-என்றான் அவனுரை கேட்டு வருந்திய மாலிக் "அப்படிக் கருதிடில் நீங்கள் இவனது விலையை என்னவென் றுரைப்பீர் ஈந்திடு வேனதை உமக்கே. எவரது குறையும் வேண்டிய தில்லை!" என்றதும் திரும்ப அவ்வணிகன் "இவனையே பொதுவாய் ஏலமிட் டிடலாம்" என்பதே என்விருப் பென்றான். "செந்தமாய் எனக்கு வேண்டிடில் நீங்கள் சொல்கிறீர் ஏலம் விட்டிடவே. விந்தையே உங்கள் விருப்பமே நமக்குள் வேற்றுமை கூடுமோ? இவனை எந்தவோர் விலைக்கு மதிப்பினும் சொல்வீர் என்பொருள் தருகிறேன்’ என்றான். "இந்தவோ ரெண்ணம் ஏற்றிடேன் அவனை ஏலமே போடுவோம்" என்றான். "நீங்களே இங்குக் கூறுவீர் ஏலம்; நிச்சயம் பெரும்விலை தந்து வாங்குவே னவனை" என்றிடும் மாலிக் வார்த்தையை மறுத்தொரு வணிகன் |