2
திருவாய்மொழித் தனியன்கள்
1. ஸ்ரீமந்நாதமுனிகள்
அருளிச்செய்தது
பக்தாம்ருதம் விச்வஜநாநு
மோதனம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீ
சடகோபவாங்மயம்
ஸஹஸ்ர சாகோபநிஷத்
ஸமாகமம்
நமாம்யகம் த்ராவிட
வேத ஸாகரம்.
பொ - ரை :
‘அடியார்கட்கு
அமிர்தமாய் இருப்பதும், எல்லா மக்களையும் ஆனந்திக்கச் செய்வதும், எல்லா உறுதிப்பொருள்களையும்
கொடுக்க வல்லதும், ஆயிரக்கணக்கான கிளைகளையுடைய உபநிடதங்களின் தொகுதியாய் இருப்பதும், நம்மாழ்வாரால்
அருளிச் செய்யப்பட்டதுமான தமிழ் வேதக்கடலை அடியேன் வணங்குகிறேன்’ என்றவாறு.
நூலுள் அடங்காது
தனியே பாயிரமாய் நிற்றல் பற்றி, இப்பாடல் ஒவ்வொன்றும் ‘தனியன்’ என்று பெயர் பெறும்
‘அன்’ உயர்வுப்பொருளது. ‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்’ (9. 4: 9.) என்பர் ஆதலின், ‘பக்தாம்ருதம்’ என்றும், ‘எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்கும்’ (7.
9: 11.) ‘அடியார்க்கு இன்ப மாரியே’ (4. 5: 10) என்பர் ஆதலின், ‘விச்வ ஜநாநு மோதனம்
என்றும், ‘மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள், நிற்கப் பாடிஎன் நெஞ்சுள் நிறுத்தினான்’
( கண்ணி நுண். 9 ) என்பர் ஆதலின், ‘சர்வார்த்ததம்’ என்றும், ‘தடங்குரு கூர்ச் சடகோபன்,
துயக்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரம்’ (3. 1 : 11) என்பர் ஆதலின், ‘ஸ்ரீ சடகோப வாங்மயம்’
என்றும், ‘சந்தங்கள் ஆயிரத்து’ (10. 9: 11.) என்பர் ஆதலின், ‘ஸஹஸ்ர சாகோப நிஷத் ஸமாகமம்’
என்றும், ‘எய்தற்கு அரிய மறைகளை இன்தமிழால் செய்தற்கு உலகில் வருசடகோபன்’ (சடகோபரந்.)
என்பர் ஆதலின், ‘திராவிடவேத ஸாகரம்’ என்றும், ‘பார்பரவு இன்கவி’ என்பர் ஆதலின்,
‘நமாம்யகம்’ என்றும் அருளிச் செய்கிறார்.
(1)
|