|
வ
விட்டுக் கழியும்
1‘வானோ மறிகடலோ,’ ‘மாடே வரப் பெறுவராம் என்றே வல்வினையார்’ என்னும்
பாசுரங்களை நினைவு கூர்க.
‘இவை நீங்கினால்,
பின்னர் இவன் செய்யத்தக்க காரியம் யாது?’ எனின், பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்-‘ பத்தியினால்
வந்த ராஜகுலங்கொண்டு பலன் தப்பாது, தன்னடையே வருகிறது,’ என்று ஆறியிருத்தல் அன்றிக்கே, காரணமான
அறிவின்மை முதலியவைகள் கழிந்தனவாகில், அவற்றின் காரியமான இச்சரீரமும் ஒருபடி போய்,
2தண்ணீர் துரும்பு அற்றுப் பலன் கைப்புகுந்தது ஆவது எப்போதோ என்று அதற்கு விரல்
முடக்கி இருக்கும் இத்தனை. ‘ஆயின், 3கேவலனைப் போன்று உடலின் நீக்கத்தினை மட்டும்
விரும்புவது என்?’ என்னில், இன்பத்தில் இச்சையுடைய ஒரு பெண் தன் உடம்பில் அழுக்கினைப்
போக்கித் தன் கணவனோடு இன்பம் நுகர்தற்கு உரிய காலத்தை எதிர் நோக்கிக்கொண்டு இருத்தல்
போன்று, இவனும் பேற்றுக்கு உறுப்பாக உடலை விட்டு உயிர் நீக்குங் காலத்தினை எதிர்பார்த்திருக்கக்
கடவன். 4‘கொங்கை மேற் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒருநாள், தங்குமேல்
என் ஆவி தங்கும்,’ என்று அழுக்குக் கழற்றி ஒப்பித்துப் பார்த்து இருந்தாள் ஒரு பிராட்டி. அப்படியே,
5அழுக்கு உடம்பு’ என்கிற இவ்வழுக்கு நீங்கி மோக்ஷமாகிய பலத்தை அடைதல் எப்போதோ
என்று பார்த்திருக்கும் இத்தனை.
1. வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் - ஆனீன்ற
கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்
வன்துயரை யாவா மருங்கு.
(பெரிய திருவந். 54.)
மாடே வரப்பெறுவ ராமென்றே வல்வினையார்
காடானு மாதானுங் கைக்கொள்ளார் - ஊடேபோய்ப்
பேரோதம் சிந்துதிரைக் கண்வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து.
(மேற்படி, 59.)
2. தண்ணீர்
துரும்பு அற்று - தடை நீங்கி.
3.
கேவலன் - கைவல்ய நிஷ்டன்.
4. நாய்ச்சியார்
திருமொழி, 8 : 7,
5. திருவித்தம்,
1.
|