|
New Page 1
‘ஆயின, கூற்றுவன்
ஒருவன் இருக்க, பேற்றினை எதிர்பார்த்து இருத்தல் என்பது எவ்வாறு பொருந்தும்?’ எனின்,
1‘மனிதன் பாவத்தினைச் செய்தவனாய் இருத்தலின், யமனைக் கண்டு அஞ்சுகிறான்; செய்யவேண்டுமவற்றைச்
செய்து முடித்தவர்கள் யமனை அன்புள்ள விருந்தினைப் போன்று எதிர்பார்க்கிறார்கள்,’ ஆதலின்,
பொருந்தும் என்க. ‘ஆயின், செய்ய வேண்டியவற்றைச் செய்து முடித்தவர்க்கு அன்றோ அது சாத்தியம்?’
எனின், செய்யவேண்டியவற்றைச் செய்து முடித்தவர் ஆவார், 2‘அரசனே சாஸ்திரங்களோடு
கூடின எல்லா வேதங்களும், அறியத் தக்க எல்லாப் பொருள்களும், எல்லா யாகங்களும், யாகங்களில்
ஆராதிக்கப்படுகின்ற எல்லாத் தேவர்களும் கிருஷ்ணனேயாவன் என்று எந்த அந்தணர்கள் கிருஷ்ணனை
உள்ளவாறு அறிகின்றார்களோ, அவர்கள் எல்லா யாகங்களையும் செய்து முடித்தவர்கள் ஆகின்றார்கள்,’
என்கிறபடியே, எம்பெருமாளையே பற்றுக்கோடாகப் பற்றின அடியார்களே யாவர். 3ஓர்
அயனத்தின் அன்று குன்றத்துச்சீயர் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே புக, அவருடைய சிறுபேரைச்
சொல்லி, ‘சிங்கப் பிரான்! இன்று அயநங்காண்,’ என்ன, திருவுள்ளத்தில் ஓடுகிறது இன்னது என்று
அறியாமையாலே அவர் பேசாது இருக்க, உயிர் உடலை விட்டு நீங்கும். அந்திம காலத்தில் பலம் கண்ணழிவற்ற
பின்பு நடுவு விரோதியாய்ச் செல்லுகிற நாளில் ஓரண்டு கழியப் பெற்ற இது உனக்கு ஒன்றாய் இருந்தது
இல்லையோ!’ என்று அருளிச்செய்தார்.
எம்பார்
ஒரு முறை, ‘பின்னும் ஆக்கை விடும்பொழுது எண்ணே,’ என்பதற்கு ‘இங்ஙனே காரணமானது கழிந்த
போதே காரியமும் தன்னடையே கழிந்ததே அன்றோ! பலமும் இனிக் கைப்புகுந்ததே அன்றோ! இனி, சிந்தாவிஷயம்
உண்டோ?’ என்று அருளிச்செய்தார்.
21
எண்பெருக்கு
அந்நலத்து, ஒண்பொருள் ஈறுஇல
வண்புகழ் நாரணன், திண்கழல் சேரே.
பொ-ரை :
எண்ணாலே மிக்கு இருப்பனவாய் [மிகப்பலவாய்] ஞானத்திற்கு நிலைக்களமாய் ஞானமயமாய் அழிவு
அற்றனவாய் இருக்கிற உயிர்களையும், அழிவு அற்ற வளவிய புகழ்களையுமுடைய நாராயணனது உறுதியான திருவடிகளைச்
சேர்வாய்.
1,
2.
பாரதம்.
3.
இது, உயிர் உடலை விடுகிற காலத்தை எண்ணிக்கொண்டிருத்தற்கு
ஐதிஹ்யம்.
|