|
ந
நீங்குதல் மோட்சம்,’
என்றார். 1ஏகாயநர்,
‘இறைவன்
சில சத்தி விசேடங்களையுடையவன்,’ என்று கொண்டனர். பரம்பொருள் உலகிற்குக் காரணம் என்று
கூறும் வைதிக மதத்திற்காட்டில், அதுவே அவர்கட்கு விசேடம்.
ஆக, மேற்கூறிய
கொள்கைகள் பதினேழும் வேத நெறிக்குப்2 புறம்பானவைகளும், மாறான நோக்கமுள்ளவைகளும்
ஆகையாலே, பயன் அற்றவைகளாம்.
நம்3
தரிசனத்திற்குத் தத்துவங்கள் மூன்று: அவையாவன, சித்தும் அசித்தும் ஈசுவரனும். ‘ஆயின்,
4‘எல்லாப் பொருள்களும் பிரமம் ஆகவே இருக்கின்றன’, ‘பொருள் ஒன்றே; இரண்டாவது இல்லை,’
என்று கூறப்படுகையில் மூன்று என்றல் என்னை?’ எனின், 5பிரகார பிரகாரிகள் ஐக்கியத்தால்
ஒன்று என்னலாய், 6சொரூப பேதத்தால் பல என்னலாயிருக்கும்.
1. ஏகாயநர் - ஓரிடத்தையே பற்றினவர்; மத்துவ மதத்தினர். நாம்
திருவோடுகூடிய நாராயணனைப் பற்றுகிறோம்;
அவர்கள் நாராயணனை
மட்டும் பற்றுபவர்களாதலின், அப்பெயரால் அருளிச்செய்கிறார். நாம்
இறைவனை ‘சர்வசத்தி’ என்கின்றோம்; அவர்கள் ‘சில சத்திகளையுடையவன்’
என்கின்றனர்.
‘அதுவே’ என்றது, பிராட்டியினுடைய சம்பந்தத்தை உடன்படாத
அதுவே என்றபடி.
2.
‘உலோகாயதிகம்’ முதற்கொண்டு ‘யோகம்’ இறுதியாக உள்ள பதினொரு
மதங்களும் புறச்சமயங்கள்;
‘பாட்டம்’ என்றது முதல் ‘ஏகாயநம்’ இறுதியாக
உள்ள ஆறு மதங்களும் வேத வாக்கியங்களுக்கு நேர்ப்பொருள்
காணாது,
மாறுபடப் பொருள் காண்பவர்களுடைய மதங்கள். ‘வேதங்கட்குப் புறம்பாக
உள்ள ஸ்மிருதிகளும்,
வேறுபட்ட குத்ருஷ்டி மதங்களும் மோக்ஷ உலகத்தை
அடைவதற்குப் பயனற்றவை; தமோ குணத்தால் செய்யப்பட்டவை,’
என்னும்
மனுதர்மசாத்திரம் இங்கு ஒப்பு நோக்குக.
3. தரிசனம் - பார்த்தல்; ‘முன்னோர்களால் பார்க்கப்பட்ட மதம்’ என்பது
பொருளாம்.
4.
‘சர்வம் கல்பிதம் பிரஹ்ம’
‘ஏகமேவ அத்விதீயம்’
5.
பிரகாரம்-அடை; அடை எனினும், விசேஷணம் எனினும் ஒக்கும். பிரகாரி.
அடைகொளி; அடைகொளி எனினும்,
விசேஷியம் எனினும் ஒக்கும்.
6.
‘ஒற்றுமை நயத்தின் ஒன்றெனத் தோன்றினும்.
வேற்றுமை
நயத்தின் வேறே உடல்உயிர்.’
(நன். சூ. 450)
என்னும் சூத்திரம் ஈண்டு
நினைவு கூர்க.
|