|
New Page 1
மோக்ஷத்திற்குக் காரணம்;
இறைவன் என்று ஒருவன் தனியே இலன்,’ என்றனர். மாயாவாதியர்,1 ‘நிர்விசேட
சிந்மாத்திரமே மாயா சமளமாய்க் கொண்டு மயங்குதல் உலக நடப்பு; ‘நீ அது ஆகின்றாய்,’
முதலான வாக்கியங்களால், உண்டாகின்ற ஞானத்தாலே அம்மயக்கம் போதல் மோட்சம்,’ என்றனர்.
பாஸ்கரீயர், 2‘அந்தப்பரம் பொருள் தானே சத்ய உபாதி கலந்ததாய்க்
கொண்டு மயங்குதல் சம்சாரம்; வர்ணாஸ்ரம தர்மங்களோடு கூடினதாய், ‘நீ அந்தப் பிரமம் ஆகிறாய்,’
என்பது முதலான வாக்கியங்களால் உண்டாகின்ற ஞானத்தை முன்னிட்டுக்கொண்டுள்ள உபாசந உருவமாய்
உள்ள ஞானத்தாலே உபாதி அழிதல் மோட்சம்,’ என்றார். யாதவப் பிரகாசர், 3‘அப்பரம்பொருள்
தானே சத்தியமான சித்து அசித்து ஈஸ்வர உருவமாய்க் கொண்டு மயங்குகிறது; அப்பரம்பொருளுக்கு உண்டான
பேதஞானமே உலகத்தின் நடப்பு; ஞான கர்மங்களின் சேர்க்கையினாலே அவ்வேற்றுமை உணர்வு
1.
விசேஷமாவது, பேதம், அதாவது, சஜாதீய விஜாதீய ஸ்வகத பேதங்கள்.
சஜாதீயமாவது, ஜீவ பிரம பேதம்;
விஜாதீயமாவது, அசித்து பிரம பேதம்;
ஸ்வகதபேதமாவது, பிரமத்துக்கும் ஞானம் சத்தி முதலான குணங்களுக்கும்
உண்டான பேதம். நிர்விசேடமாவது, இவையின்றி இருத்தல். ஆக, இம்மூன்று
பேதமும் இல்லாத என்றபடியாம்.
சிந்மாத்திரம், ஸ்வயம்பிரகாசமாயிருக்கிற
பரம்பொருள். மாயாசபளம், மாயை கலத்தல். மாயை,
அவித்தியை. ‘முதலான’
என்றதனால், ‘நான் நீயாக இருக்கின்றேன்’, ‘நான் எப்பொருளோ,
அப்பொருளே
பிரமம்; அப்பரம்பொருள் எதுவோ, அதுவே நான்,’ என்பன
முதலான வாக்கியங்களைக் கொள்க. ‘அம்மயக்கம்
போதலே மோட்சம்,’
என்றது, பரம்பொருளோடு ஒன்று என்ற பாவமே மோட்சம் என்றபடி.
2.
‘அந்தப் பரம்பொருள்தானே’ என்பதிலுள்ள ‘அந்த’ என்ற சுட்டு,
பரம்பொருளினை மாத்திரம்
சுட்டுகிறது; நிர்விசேஷம்’ முதலியவைகளைச்
சுட்டுகிறது அன்று. அவர்கள் பரம்பொருளைச் ‘சகுணம்’
என்று
கொள்வார்கள் ஆதலின். உபாதியாவன, தேகம் இந்திரியம் முதலியவைகள்.
3.
‘அப்பரம்பொருள்தானே’ என்பதிலுள்ள அகரச்சுட்டு, பரம்பொருளினை
மாத்திரம்சுட்டுகிறது; நிர்விசேஷம்
முதலியவைகளைச் சுட்டுகிறதன்று. காரணம்,
பரம்பொருள். சித்து அசித்து ஈஸ்வர ரூபங்களாக மாறுகின்றது
என்று
பரிணாம ரூப விசேஷத்தை அவர்கள் அங்கீகரிக்கை.
|