|
வணக
வணக்கத்தால்1
இன்ப துன்ப ஞானம் அழிதல் மோட்சம்,’ என்றனர்.2 பாசுபதர், ‘உலகிற்கு முதற்காரணம்
பரமாணுக்கள்; ஆகமங்களிற்கூறப்படுகின்ற சிவபெருமான் நிமித்தகாரணன்; பிறப்பு இறப்புகள் அநாதி;
ஆகமங்களிற்கூறப்படுகின்ற கர்மங்களைச் செய்துகொண்டு வருவதால், சிவபெருமானுடைய சாரூப்பியத்தைப்
பெறுதல் மோட்சம்,’ என்றனர்.3 சாங்கியர், யோகியர்,
‘மூலப்பகுதியானது
வேறு ஒன்றன் உதவி இன்றித் தானாகவே உலகிற்குக் காரணம் ஆகின்றது; அந்த மூலப்பகுதியோடு ஆன்மாவிற்கு
உண்டான அநாதி சம்பந்தமே பிறப்பு இறப்புகட்குக் காரணம்; அம்மூலப்பகுதி வேறு, புருஷன் வேறு என்று
அறிதலே மோட்சம்,’ என்றனர்.
4பாட்டர்,
பிரபாகரர், ‘உயிர்கள் என்றும் உள்ளவைகளாய், எண் இறந்தனவாய், எங்கும் நிறைந்தனவாய்,
அநாதி கர்மத்தாலே பிறந்து இறந்து வருகின்றன; இவ்வுலகம் 5நீர்ப்பெருக்குப்
போன்று என்றும் உள்ளது; 6கர்ம அபூர்வமே ஆன்மாவை அடைதலாகிய
1. இன்ப துன்ப ஞானம் அழிதலாவது, கல்லைப்போன்று இருத்தல்.
2.
பாசுபதர் - பசுபதி மதத்தைப் பின்பற்றுபவர்; சைவர். இவர்களிலே சிலர்
பரமாணுக்களே உலகிற்கு
முதற்காரணம் என்கையாலே, பிரகிருதி
முதற்காரணம் என்கிற ஸ்ருதப்பிரகாசிகையோடு விரோதமில்லை.
அவ்வாறே,
ஆகமசித்தேஸ்வரன் நிமித்த காரணம் என்று அவர்களிலே சிலர்
சொல்லுகையாலே, ஆநுபாநிகேஸ்வரன்
நிமித்தகாரணம் என்கிற வேதாந்த
தீபத்தோடும் விரோதமில்லை என்பர் அரும்பதவுரை காரர்.
ஆகமம் - சிவ
ஆகமம். சாரூப்பியம் - கடவுளைப்போலும் வடிவம் பெறுதல்.
3.
சாங்கியர் - கபில ஆகம நிஷ்டர். இறைவன் உளன் என்னும் சாங்கியரையும்,
இறைவன் இலன் என்னும்
சாங்கியரையும் கூறியபடி. யோகியர் -
பதஞ்சலிமதநிஷ்டராதல், ஹிரண்யகர்ப்பமத நிஷ்டராதல்.
4.
இது முதற்கொண்டு, வேதவாக்கியங்களுக்கு நேர்ப்பொருள் காணாது,
மாறுபடப் பொருள் காண்பவர்களைப்பற்றி
அருளிச்செய்கிறார்.
5.
‘நீர்ப்பெருக்குப் போன்று’ என்றது, கங்கை முதலிய நதிகளில் செல்லுந்
தண்ணீர் சென்றுகொண்டேயிருக்கவும்,
மேலும் மேலும் தண்ணீர்
வந்துகொண்டேயிருப்பதனால் வெள்ளம் நிலைத்திருப்பதாகக்
காணப்படுதல்போன்று,
உயிர்கள் இறந்துகொண்டேயிருக்கவும், மேலும் மேலும்
பிறந்துகொண்டேயிருப்பதனால் உலகம் நிலைத்திருப்பதாகக்
காணப்படுதலைத்
தெரிவித்தபடி.
6. பூர்வம் - முன்பு; ஆபூர்வம் - முன்பு இல்லாதது. கர்ம அபூர்வம்
-
ஆன்மாக்கள் கர்மங்களைச் செய்யும்
போது அதன் பயனாக முன்பு
இல்லாததொன்று புதியதாகத் தோன்றும்; அவ்வாறு தோன்றுவதனையே கர்மா
பூர்வம் என்கின்றனர்.
|