|
1அற
1அறவோர்
சிலர், ஏரி கல்லினால், சேற்றிலே தலையை நொழுந்திப் பட்டுப் போகாநிற்பர் சிலர்; விடாயர்
அதிலே முழ்கி விடாய் தீர்ந்து போகாநிற்பார்கள்; விளக்கை ஏற்றினால் அதிலே விட்டில் முதலிய
சில பொருள்கள் விழுந்து முடிந்து போம்; சிலர், அதன் ஒளியிலே உய்வு பெறுவார்கள். ‘ஆயின்,
இறைவன் தடாகமும் விளக்கும் ஆவனோ?’ எனின், 2‘வாசத்தடம்’, 3‘மரகதமணித்தடம்’
என்றும், 4‘வேங்கட மலைமேல் மேவிய வேத நல்விளக்கை’, 5‘ஆயர் குலத்தினில்
தோன்றும் அணிவிளக்கை’, 6‘வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி’
என்றும் இறைவன் தடாகமாகவும் விளக்காகவும் கூறப்படுதல் காண்க. ‘ஆயின், தீவினையாளர் கேடுற்றதும்,
நல்வினையாளர் உய்வு பெற்றதும் காணும் இடம் உண்டோ?’ எனின், அவன்தான், 7‘அன்றிய
வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டதும்’ இப்படி வந்து அவதரித்து எளியனான நிலை தன்னிலேயன்றே?
அப்படியே சிசுபாலன் முதலியோர், பூதனை, சகடாசுரன், இரட்டைமருத மரங்கள் இவர்கள் எதிரிட்டு
முடிவுற்றமையும், அக்குரூரர் மாலாகாரர் முதலியோர் அடைந்து உய்வு பெற்றமையுங் காண்க.
‘‘அவனை வழிபடுமின்’
என்று 8பலகாலும் அருளிச்செய்கின்றீர்; கண்ணாலே கண்டால் அல்லது வழிபட விரகு இல்லை;
வழிபட்டால் அல்லது காண விரகு இல்லை; ஆன பின்னர், அவனை அடைதல் எங்ஙனம்?’ எனின், 9‘நம்மைக்காட்டிலும்
உயர்ந்தவர்களான பிரமன் சிவன் இவர்களைத் தனக்கு அடிமையாகவுடைய இறைவனைப் பரபத்தியால்
பார்த்த அளவில் மனத்தில் இருக்கின்ற
1. எளிமையே
உய்வு பெறுவதற்கும் கேடு உறுவதற்கும் காரணம் என்பதற்கு
எடுத்துக்காட்டும் மேற்கோள், ‘அறவோர்
சிலர்’ என்று தொடங்கும்
வாக்கியம். நொழுந்தி - நுழைத்து.
2. திருவாய்.
8. 5 : 1.
3. திருவாய்.
10. 1 : 8.
“மருக்கிளர் தாமரை வாச நாண்மலர்
நெருக்கிடு தடம்என இருந்த நீதியான்”
(கம். யுத். 475.)
என்ற கவிச்சக்கரவரத்தியின்
கூற்று இங்கு ஒப்பு நோக்கல் தகும்.
4. பெரிய
திருமொழி, 4. 3 : 1.
5. திருப்பாவை,
5.
6. பெருமாள் திருமொழி, 10. 1.
7. பெரிய
திருமொழி, 4. 3 : 8.
8. ‘பலகாலும்’ என்றது, மேல் திருப்பதிகத்தில் ‘வீடு செய்மின்’ ‘இறை சேர்மின்’,
‘அந்நலம்புல்கு’,
‘இறைபற்று’ என்றதனை நோக்கி.
9. முண்டக
உபநிடதம்.
|