|
அவ
அவா முதலியன அழிகின்றன,’
என்றும், 1‘பரபத்தியால் என்னை உண்மையாக அறிகின்றவன் பிறகு என்னையே அடைகின்றான்,’
என்றும் சொல்லுகிறபடியே, சில வருத்தங்களோடே காணக்கூடிய சாதன பத்தியை அன்று இங்குச்
சொல்லுகிறது; காணவேண்டும் என்னும் 2ஆசை சிறிதுடையார்க்கும் அவன் எளியனாம்படியைச்
சொல்லுகிறது. ‘ஆயின், அறப்பெரியவன் ஆசை சிறிது உடையார்க்கு எளியனாகை கூடுமோ?’ எனின்,
அறப்பெரியவன் தாழ நிற்கும் அன்று தடை செய்குநர் எவருமிலர். ‘ஆயின், அறப்பெரிய அவன் இம்மண்ணுலகில்
வந்து அவதரித்தான் என்பது பொய்யே அன்றோ?’ எனின், 3‘பகைவர்களை அழியச் செய்கின்ற
அருச்சுனா, எனக்கும் பல பிறவிகள் கழிந்தன; உனக்கும் பல பிறவிகள் கழிந்தன; ஆயின், அப்பிறவிகள்
பலவற்றையும் யான் அறிகின்றேன்; அவற்றை நீ அறியாய்,’ என்று அருச்சுனனை நோக்கி, ‘நீ பிறந்தது
போன்று, நானும் பிறக்கின்றேன்,’ என்கிறான் கிருஷ்ணன்; அருச்சுனன் பிறந்தது பொய் அன்று;
ஆதலால், இறைவன் அவதரித்ததும் பொய் அன்று.
‘ஆயின்,
அருச்சுனன் பிறவிக்குக் காரணம் கர்மம்; இறைவன் பிறவிக்குக் காரணம் யாது?’ எனின், இச்சையே;
இதுதன்னை அவதார ரஹஸ்யத்தில் 4தானும் அருளிச்செய்தான் அன்றே, 5‘என்னுடைய
பிறவிகளும் பிறவிகளிற் செய்யப்படுகின்ற தொழில்களும் தெய்வத்தன்மை வாய்ந்தவை,’ என்று?
அதாவது, ‘என்னுடைய பிறவிகள் கர்மம் அடியாக அல்ல; இச்சை அடியாக இருக்கும். 6நாம்
பிறவாநிற்கச்செய்தே பிறவாமையும் கிடக்கும்; தாழ நின்ற நிலையிலே மேன்மையும் கிடக்கும்;
7அப்ராக்கிருத சம்ஸ்தானத்தை இதர சஜாதீயமாக்கி வந்து பிறப்போம்; இவற்றுள்
1. ஸ்ரீ கீதை, 18 : 55.
2. ‘பத்துடை
அடியவர்க்கு எளியவன்’ என்றதனை நோக்கி, ‘ஆசை
சிறிதுடையார்க்கும் அவன் எளியனாம்படியைச்
சொல்லுகிறது’ என்கிறார்.
3. ஸ்ரீ கீதை, 4 : 5.
4. ‘தானும்
என்ற உம்மை, பராசுரர் முதலிய மஹரிஷிகளைத் தழுவுகின்றது.
5. ஸ்ரீ கீதை, 4 : 9.
6. “முதன்முறை இடைமுறை கடைமுறை தொழிலின்
பிறவாப்
பிறப்பிலை; பிறப்பித்தோ ரிலையே”
(பரிபா. 3: 71 72.)
என்னும் பகுதி இங்கு ஒப்பு
நோக்கத்தகும்.
7. அப்ராக்ருத
சம்ஸ்தானம் - பிரகிருதி சம்பந்தமில்லாத திருமேனி, இதர
சஜாதீயம் - மற்றைச் சாதிகளோடு சேர்ந்ததாக.
|