பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
136

ஒன

ஒன்றை அறிந்தவர்கட்குப் பின்னர்ப் பிறவி இல்லை; நானும் பிறந்து அவர்களும் பிறக்க வேண்டுமோ? 1ஈர் இறை உண்டோ?’ என்றான் என்றபடி. ஆக, இறைவன் இராமன், கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைப் பண்ணிக்கொண்டு எளியனாம்; ஆன பின்பு, அடைதல் கூடும்; நீங்களும் அவன் ஸ்ரீகீதையில் அருளிச்செய்தவாறே நின்று, அவற்றை உயர்வதற்கு உரிய சிறந்த நெறியாகக் கொண்டு அவனை அடைமின்,’ என்கிறார்.

    ‘நன்று; பிறர்க்கு உபதேசிக்கப் புக்க இவர், தாம் கலங்குதற்குக் காரணம் என்னை?’ எனின், அவதாரங்களை 2முன்னோட்டுக்கொண்டு, அவதாரங்களிலும் 3நீர்மைக்கு எல்லை நிலமான கிருஷணாவதாரத்திலே இழிந்து, அதுதன்னிலும் பரத்துவத்தோடு ஒக்கச் சொல்லக் கூடிய நிலைகளைக் கழித்து, 4நவநீத சௌர்ய நகர க்ஷோபத்திலே அகப்பட்டு, 5இளமணற்பாய்ந்து ‘எத்திறம்!’ என்று மோஹித்துக்கிடக்கிறார். ‘ஆயின், பரத்துவத்தைக்காட்டிலும் சௌலப்யம் ஈடுபடுத்துமோ?’ எனின், 6பரத்துவத்தை நினைந்தார், தெளிந்திருந்து பிறர்க்கு உபதேசம் செய்தார்; எளிமையினை நினைந்தார், ‘எத்திறம்!’ என்று மோஹித்துக் கிடக்கிறார்.

23

        பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
        வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெறல் அடிகள்
        மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடையாப்புண்
        எத்திறம் உரலினொடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே! [டு

    பொ-ரை : ‘பத்தியையுடைய அடியார்கட்கு எளியவனாயும் அஃது இல்லாத பிறர்கட்கு அரியவனாயும் உள்ள ஆச்சரியமான குணங்களையுடையவன், தாமரைப்பூவில் வீற்றிருக்கும் பெரிய பிராட்டியார்

 

1. ஈரிறை - இரண்டு அரசர்கள். ‘ஒரு நாட்டிற்கு அரசன் ஒருவனே இருப்பான்;
  இருவர் இரார்’ என்பார், ‘ஈரிறை உண்டோ?’ என்கிறார்.

2. முன்னோட்டுக்கொண்டு - ஆராய்ந்து.

3. நீர்மைக்கு எல்லை நிலம் - எளிமைக்கு முடிவான இடம்.

4. நவநீத சௌர்ய நகர க்ஷோபம் - வெண்ணெய் களவு செய்த காரணத்தால்
  நகரத்தில் உண்டான பரபரப்பு.

5. இளமணற்பாய்தல் - இரங்கிய மனத்தையுடையராதல்.

6. இதனால், பரத்துவத்தைக்காட்டிலும் எளிமையே ஈடுபடச் செய்யும் என்றபடி