|
வ
விரும்புகிற பெறுதற்கு
அரிய நம் சுவாமியானவர், மத்தினை உறுத்திக் கடையப்படுகின்ற வெண்ணெயினைக் களவு செய்யுங்காலத்தில்
மார்பிலே கட்டுண்டு உரலோடு ஒத்து இருந்து ஏங்கிய எளிமைத் தன்மை எத்திறம்!’ என்கிறார்.
வி-கு :
பத்து - பத்தி. ‘பத்துடையீர் ஈசன் பழஅடியீர்’ (திருவாச. 157) என்பதூஉம் இப்பொருட்டு.
‘எட்டினோடு இரண்டும் அறியேனையே’ (திருவாச. 53) என்ற இடத்தில் இப்பத்து என்பதனையே வேறு
ஓர் ஆற்றால் கூறியவாறு. இனி, பற்று என்பது பத்து என வந்தது என்பாரும் உளர். ‘விரும்பும் அடிகள்’
என்றும், ‘யாப்புண்டு இணைந்து’ என்றும் முடிக்க. ‘இணைந்து’ என்பது உவமவுருபு. பொருந்தி எனப்
பொருள் கூறலுமாம்.
இப்பதிகம் ஐஞ்சீர்
அடி நான்காய் வருதலின், கலித்துறை எனப்படும்.
ஈடு :
முதற்பாட்டில், எம்பெருமானுடைய எளிமையினை உபதேசிக்கப் புக்கு, அவன் வெண்ணெய் களவுகண்ட சரித்திரத்தில்
அழுந்துகிறார்.
பத்து-பத்தி.
‘பத்து என்பது பத்தியைக் காட்டுமோ?’ என்னில், 1‘எட்டினோடு இரண்டு எனுங் கயிற்றினால்
மனந்தனைக் கட்டி’ என்று கூறப்படுகின்றது அன்றே! ஆகையாலே, பத்து என்று பத்தியைச் சொல்லுகிறதாகும்.
அதுதன்னிலும் 2பரபத்தியை அன்று இங்குச் சொல்லுகிறது; 3பத்தியின் தொடக்கத்தைச்
சொல்லுகிறது. ‘பத்தியின் தொடக்கம் என்று இதனை நியமிப்பார் யார்? அதனுடைய முடிவான எல்லையினைக்
காட்டினாலோ?’ என்னில், அஃது ஒண்ணாது; ‘என்னை?’ எனின், இப்போது இங்குச் சொல்லிக் கொண்டு
போருகிற இது, 4குணப்பிரகரணம் ஆகையாலும், சர்வேஸ்வரனுக்கு ஓர் ஏற்றஞ்சொல்லுகை
இப்போது இவர்க்கு விருப்பம் அல்லாமையாலும், தம்மையே நம்பி வந்து அடைந்தவர்களிடத்தில் தாமும்
அன்புடன் இருத்தல் ஏனையோர்க்கும் உண்டு ஆகையாலும்,
1. திருச்சந்த
விருத்தம், 83
2. பரபத்தி
- இறைவனைச் சேரும்போது இன்பமும், பிரியும்போது துன்பமும்
அடைதற்குக் காரணமான அன்பு.
3. ‘பத்தியின்
தொடக்கம்’ என்றது, விலக்காமை பகையாமை முதலிய
குணங்களை.
4. இறைவனுடைய
எளிமைக்குணத்தைக் கூறும் இடம் ஆதலால்,
‘குணப்பிரகரணம்’ என்கிறார்.
|