பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
172

னு

னுடைய பெரிய இந்நிலவுலகத்தை எல்லாம் அளந்த சிறந்த திருவடித்தாமரைகளை மனத்தால் மறப்பு இல்லாதவனாகி, நாவால் அலற்றுகின்றவனாகி, உடலால் தழுவுகின்றவனாகிப் பொருந்தி வணங்குவேன்.

    வி-கு : மயக்கு - குணங்களும் செயல்களும்; அவை, மயங்கச் செய்வன ஆதலின், ‘மயக்கு’ எனப்பட்டன. மாயை - அவதாரம். ‘அயர்ப்பிலன்’ முதலிய மூன்றும் முற்றெச்சங்கள். ‘அமர்ந்து வணங்குவன்,’ என மாற்றுக. ‘திருமால்நின், செங்கமல இரண்டு அடியால் மூவுலகும் இருள் தீர நடந்தனையே’ (சிலப். ஆய்ச்சி. தாழி.) எனப்படும் அடிகளாதலின், ‘நல்லடிப்போது’ என்கிறார்.

    ஈடு : பத்தாம் பாட்டு. ‘இறைவன் 1விமுகர் பக்கல் பண்ணுமவை நிற்க; அவன் காட்டின வழியே காணப்புக்க நாம், மனம் வாக்குக் காயங்களால் நம் விடாய் கெடத் திருவுலகு அளந்த திருவடிகளை அனுபவிப்போம்,’ என்று பாரிக்கிறார்.

    துயக்கு அறு மதியில்-ஐயம் திரிபுகள் இல்லாத மதியையுடையவர் ஆகையாலே, நன்ஞானத்து உள் அமரர்-மேலான அமரர். ‘உள்’ என்பது ‘மனம், இடம், மேல்’ என்னும் பல பொருளைக் காட்டும் ஒரு சொல்; அது இங்கு, மேல் என்னும் பொருளில் வந்தது. நன்றான ஞானத்தையுடையரான அமரரையுங்கூட என்றபடி, துயக்கும் மயக்குடை மாயைகள்-அறிவு கெடும்படி தெரியாமையைப் பண்ணுகின்ற குணங்களோடும் செயல்களோடும் கூடின அவதாரங்கள். வானிலும் பெரியன வல்லன்-ஆகாயத்தை அளவிட்டு அறியிலும் அளவிட்டு அறியப்போகாது. துயக்கு-மனந்திரிவு அமரர்-இந்திரன் முதலிய தேவர்கள். ‘இராஜச தாமத குணங்கள் மிக்கிருக்கும் தேவர்களை ‘நன்ஞானத்துள் அமரர்’ என்னலாமோ?’ எனின் இரஜோகுண தமோகுணங்கள் மிக்கிருந்தாலும், சத்துவகுணம் தலை எடுத்தாலும் அப்படியே அதற்குரிய குணங்கள் மிக்கிருக்குமே அவர்கள் தங்களுக்கு; அதை நோக்கி அருளிச்செய்கிறார். சத்துவ குணம் தலை எடுத்தபோது, ‘நம் காரியம் நம்மாற் செய்யப்போகாது; அவனே நம் காரியத்திற்குக் கடவன்,’ என்று இருப்பர்; அடுத்த கணத்திலேயே எதிரிடா நிற்பர். ‘அப்படி எதிர்த்த இடம் உண்டோ?’ எனின், தங்கள் இருப்பிடமும் இழந்து, பெண்களும் பிடி உண்டு, எளிமைப்பட்ட அளவிலே அதனைப் போக்கித் தரவேண்டும் என்று இரக்க, பின்னை இவனும் சென்று, நரகனைக்கொன்று, சிறை கிடந்த பெண்களையும் மீட்டுக் கொடுத்துக் காத்த காலத்தில்

 

1. விமுகர் - முகம் மாறி நிற்பவர்கள்.