|
New Page 1
செல்வராகில், செல்லும்
அச்செயல் அவ்விராமனுக்குத் தக்கதாம்,’ என்று கூறிய பிராட்டியே பிரிவுத்துன்பத்தைப் பொறுக்கிலளாகித்தன்
சடையினைக்கொண்டு தூக்கிட்டு இறப்பதற்கு நினைந்தமையும் ஈண்டு நினைத்தல் தகும். ‘ஆயின்,
பறவை முதலானவைகளைத் தூதுவிடல் பண்டைய மரபு ஆமோ?’ எனின், 1‘அன்னங்களும் நீர்க்காகங்களும்
நிறைந்திருக்கின்ற கோதாவிரி நதியே, உன்னை வணங்குகிறேன்; ‘சீதையை இராவணன் தேரில் ஏற்றுக்கொண்டு
செல்கிறான்,’ என்று நீ இராமனிடம் சென்று விரைவிற்கூறு,’ என்று பிராட்டியும், 2‘சோகத்தினை
நீக்குதலையே இயல்பாகவுடைய அசோக மரமே, கலங்கி இருக்கும் எனக்குப் பிராட்டி இருக்கும் இடத்தினைத்
தெரிவித்து, என்னையும் விரைவில் உன் பெயரைப் போலவே செய்,’ என்று பெருமாளும் கூறுதலால், தூது
விடல் பண்டைய மரபேயாம்.
‘ஆயின், பிராட்டியின்
நிலை உண்டாகிறபடி எங்ஙனே?’ என்னில், 3அநந்யார்ஹ சேஷத்துவம், அநந்ய சரணத்துவம்,
கூடி இருக்கும் போது தரிக்கை, பிரிந்திருக்கும் போது தரியாதொழிகை, அவனுக்கே இன்பத்தை
அளிக்கை, அவன் காப்பாற்றுகின்றவனாகத் தாம் காப்பாற்றப்படும் பொருளாக இருக்கை ஆகிய இவ்வாறு
குணங்களும் ஆழ்வார்க்கும் உள ஆதலின், பிராட்டியின் நிலை உண்டாகத் தட்டு இல்லை. ‘ஆயின்,
பிராட்டி தானாகப் பேசுவான் என்?’ என்னில், தாமரை திருவடிகளுக்குப் போலியாக இருக்க, 4‘வையங்கொண்ட
தடந்தாமரை’ என்று தாமரையாகவே திருவடிகளைப் பேசுவது போன்று, இங்குப் பிராட்டியாகவே பேசப்படுகிறது;
5முற்றுவமை இருக்கிறபடி. ‘ஆயினும், இவர் ஆடவர் ஆகையாலே ஆண் தன்மை பின் நாடாதோ?’
எனின், இராஜ இருடி பிரம இருடியான பின்னர் அரசருடைய தன்மை பின் நாட்டிற்றில்லை
1. ஸ்ரீராமா. ஆரண். 49 : 32.
2. ஸ்ரீராமா. ஆரண். 6 : 17.
3. அநந்யார்ஹ சேஷத்துவம் - வேறு ஒருவர்க்குமின்றி இறைவனுக்கே
அடிமைப்பட்டிருக்குந் தன்மை. அநந்ய
சரணத்துவம் - இறைவனையே
பற்றுக்கோடாகப் பற்றியிருக்குந் தன்மை.
4. திருவாய். 6. 9 : 9.
5. இதனைப் பிற்காலத்தார் ‘உருவகம்’ என்பர்.
|