|
அன
அன்றே? எதிர்த்தலையில்
1ஆண் தன்மையை அழித்துப் பெண்ணுடை உடுத்தும்படியன்றோ அவனுடைய புருஷோத்தமனாந்தன்மை
இருப்பது? ஆதலால், நாடாது.
‘நன்று; அந்தப்புரத்தில்
வசிக்கும் இப்பெண்ணிற்குத் தூது விடுகைக்குப் பறவைகள் உளவோ?’ எனின், கூடும் இடம் குறிஞ்சி;
அதற்குப் பூதம் ஆகாயம். பிரியும் இடம் பாலை; அதற்குப் பூதம் நெருப்பு. ஊடும் இடம் மருதம்;
அதற்குப் பூதம் வாயு. இரங்கும் இடம் நெய்தல்; அதற்குப் பூதம் தண்ணீர். 2இவ்வகையில்,
பிரிந்தார் இரங்குவது நெய்தல் ஆகையாலே, பிராட்டி, தானும் தன் தோழிகளுமாக விளையாடும் பூஞ்சோலைக்குப்
புறப்பட்டுச் செல்ல, சென்றதும் தோழிமார் பூக்கொய்கையில் கருத்தூன்றினவர்களாய்த் தனித்தனியே
பிரிய, தலைவனும் தன் நேராயிரம் பிள்ளைகளும் தானுமாக வேட்டைக்குப் புறப்பட்டு வர, 3ஏவுண்ட
விலங்கு இவனை இப்பூஞ்சோலையில் தனியே கொண்டு வந்து மூட்டி மறைய, முற்பிறவியிற் செய்த நல்வினைப்
பயனால் இருவருக்கும் புணர்ச்சி உண்டாக, பின்னர், கூட்டின தெய்வம் பிரிக்கப் பிரிந்து,
‘இனி, இரண்டு தலையையும் அழித்தாகிலும் கிட்ட வேண்டும்,’ என்னும் ஆற்றாமை பிறந்து, தன்
அருகிலுள்ள தோழிகள் 4‘எம்மின் முன் அவனுக்கு மாய்வர்’ என்கிறபடியே தளர்ந்தவர்கள்
ஆதலின், கால்நடை தருவார் இல்லாமையாலே, அப்பக்கத்தில் வசிக்கின்ற விலங்குகள் சிலவற்றைப்
பார்த்து, ‘இவை வார்த்தை சொல்ல மாட்டா,’ என்னுமது அறியாதே, ‘இவற்றுக்குப் 5பக்ஷபாதம்
உண்டாய் இருந்தது ஆகையாலே,
1.
‘ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினாய், தாடகை என்பது அச்சழக்கி
நாமமே,’ என்னும் கம்பராமாயணச்
செய்யுள் ஈண்டு நினைத்தல் தகும்.
2.
‘போக்கெல்லாம் பாலை’ புணர்தல் நறுங்குறிஞ்சி :
ஆக்கஞ்சேர்
ஊடல் அணிமருதம்; - நோக்குங்கால்
இல்இருக்கை
முல்லை; இரங்கல் நறுநெய்தல்
சொல்லிருக்கும் ஐம்பால் தொகை.’
என்னும் செய்யுளை ஈண்டு ஒப்பு
நோக்குக.
3.
ஏவுண்ட - அம்பு தைத்த. ‘எய்யப்பட்ட’ எனலுமாம்.
4. திருவாய். 9. 9 : 5.
5. பக்ஷபாதம்-சிலேடை : சிறகு அடித்துச்செல்லுதல்; அன்பு விழுதல். இங்கு,
தன் ஆற்றாமை அறிவிக்கலாம்படி
தன் பக்கத்தில் சஞ்சரிக்கிற
காரணத்தாலே அன்புடையன என்று நினைக்கிறாள்.
|