|
அவ
அவனை விடாதேகொள்,’
என்று போகவிட்டாள்; முடிவில், இத்திருவாய்மொழியைக் கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினாள்.
1முதற்பாட்டில்,
ஆசாரியனுடைய ஞானத்தின் பெருமையை அருளிச்செய்தார்; இரண்டாம் பாட்டில், இனிமையாகப்
பேசுகின்றவனாக இருப்பான் என்றார்; மூன்றாம் பாட்டில், ஸாராஸாரங்களைப் பகுத்து அறிகின்றவன்
என்றார்; நான்காம் பாட்டில், திருமேனியின் பேரழகினை அருளிச்செய்தார்; ஐந்தாம் பாட்டில்,
‘நினைத்தது கிட்டும் அளவும் சலியாத தூய தன்மையுடையான்’ என்றார். ஆறாம் பாட்டில், ‘பகவானையே
அனுபவிக்கின்றவனாய் இருக்கும் அழகனுமாய்ப் பெருமிதமுடைவனுமாய் இருப்பான்’ என்றார்; ஏழாம் பாட்டில்,
‘தான் முற்றறிவினன் ஆகிலும் ஆசாரியர்கள் பக்கல் கேட்ட வார்த்தை அல்லது அருளிச்செய்யான்,’
என்று அவனுடைய ஆப்தியை அருளிச்செய்தார்; எட்டாம் பாட்டில், ‘ஆசாரியனுடைய தேக யாத்திரையே
இவனுக்கு ஆத்தும யாத்திரை’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘ஆசாரியனுடைய சம்பந்தமாத்திரமே
இருப்புக்குத் தாரகம்; மற்றையோருடைய உறவு இருப்புக்குப்
1. பத்துப் பாசுரங்கட்கும் உள்ளுறைப்பொருள் அருளிச்செய்கிறார். ‘ஞானத்தின்
பெருமையை அருளிச்செய்தார்’
என்றது, ‘அஞ்சிறைய மடநாராய்’ என்றதில்
நோக்கு; இரண்டு சிறகுகளும் ஞான அநுஷ்டானங்களாகக்
கூறப்படும்.
‘இனிமையாகப் பேசுகின்றவன்’ என்றது, குயிலின் ஒலி இனியதாயிருத்தல்
நோக்கி,
‘சாராசாரங்களைப் பகுத்தறிகின்றவன்’ என்றது, ‘மென்னடைய
அன்னங்காள்’ என்றதனை நோக்கி.
‘திருமேனி பின் பேரழகினை’ என்றது -
‘நன்னீல மகன்றில்காள்’ என்றதனை நோக்கி. ‘நினைத்தது
கிட்டுமளவும்
சலியாத நிலையினன்’ என்றது, ‘இரைதேர்’ என்றதனை நோக்கி.
பகவானையே அனுபவிக்கின்றவனாய்
இருக்கும் அழகனுமாய்ப் பேரருள்
வாய்ந்தவனுமாய்ப் பெருமிதமுடையவனுமாய்’ என்றது - முறையே ‘வண்டு
என்றதனையும்,’ ‘வரி’ என்றதனையும், ‘ஆழி’ என்றதனையும் நோக்கி.
‘வண்டு ஏகபோகமோ?’ எனின்,
வண்டு தேனையன்றி உண்ணாது; மதுகரம்
என்ற பெயரின் பொருளையும் நோக்குக. ‘தான் முற்றறிவினனாகிலும்
ஆசாரியர்கள் பக்கல் கேட்ட வார்த்தையல்லது அருளிச்செய்யான்’ என்றது,
‘இளங்கிளியே’ என்றதனை
நோக்கி. ‘ஆசாரியனுடைய தேக யாத்திரையே
இவனுக்கு ஆத்தும யாத்திரை,’ என்றது, ‘இன்னடிசில் வைப்பாரை
நாடாயே’
என்றதனை நோக்கி. ஆசாரியனுடைய சம்பந்த மாத்திரமே சத்தாதாரகம்,
மற்றையோருடைய
உறவு சத்தா பாதகம்’ என்றது, காற்றின் பரிசம் பாதகம்
என்றதனால், எதிர்மறைப்பொருளில் ஆசாரிய
சம்பந்தமே தாரகம் என்பது
போதரும்.
இத்திருப்பதிகத்தில்
ஏழாம் பாசுரம் முடிய, ஆசாரியனுடைய இலக்கணம்;
மேல் மூன்று பாசுரங்கள் மாணாக்கனுடைய இலக்கணம்.
|