பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
223

பாதகம்,’ என்றார்; பத்தாம் பாட்டில், ஆக, இப்படி ஞானத்தையுடையவனுமாய், இனிமையாகப் பேசுகின்றவனுமாய், ஸாராஸாரங்களைப் பகுத்து அறிகின்றவனுமாய், காட்சிக்கு இனியனுமாய், சுத்த சுபாவனுமாய், பேரருள் பெருமிதங்களையுடையனுமாய், பல காலம் வழிபாடு புரிந்து வரும் பெரியோர்களால் சேவிக்கப்படுகின்றவர்களால் சேவிக்கப்படுகின்றவனுமாய், உத்தம மாணாக்கன் ஆகையாலே, இத்தகைய ஆசாரியனுடைய தேக யாத்திரையே தனக்கு ஆத்தும யாத்திரையாய், மற்றையாருடைய உறவு தனக்குப் பாதகமாய், இப்படி உண்மை அறிந்த, ஆசாரியனுக்குத் தொண்டு செய்கையாலே இறைவனுக்குச் செய்யுந்தொண்டில் அன்புள்ளதாய், 1நின் இடையேன் அல்லேன் என்று நீங்கி ஓர் கோலம் நீலம் நன்னெடுங் குன்றம் வருவது ஒப்பான் நாண்மலர்ப்பாதம் அடைந்தது தம் திருவுள்ளம் என்று தலைக்கட்டினார் :

திருவாய்மொழி நூற்றந்தாதி

        அஞ்சிறைய புட்கள் தமை ‘ஆழியா னுக்குநீர்
        எஞ்செயலைச் சொல்லும்’ என இரந்து - விஞ்ச
        நலங்கியதும் மாறன்இங்கே நாயகனைத் தேடி
        மலங்கியதும் பத்தி வளம்.

(4)

    ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.

 

1. ‘என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்!
  யான்இனிச் செய்வதென் ? என்நெஞ் சென்னை
  நின்னிடை யேன்அல்லே னென்று நீங்கி
  நேமியும் சங்கமு மிருகைக் கொண்டு
  பன்னெடுஞ் சூழ்சுடர் ஞாயிற் றோடு
  பால்மதி யேந்திஓர் கோல நீல
  நன்னெடுங் குன்றம் வருவ தொப்பான்
 
நாண்மலர்ப் பாதம் அடைந்ததுவே.

(8. 2 : 10)