|
ஈ
ஈடு :
முடிவில், ‘இத்திருவாய்மொழியைக் கற்று உணர வல்லார்கட்கு,
இறைவன் வரக்கொள்ளத் தம் தாழ்மையை நினைத்து அகன்று இவர் பட்ட கிலேசம் படவேண்டா,’ என்கிறார்.
மாலே-1சொரூபத்தால்
வந்த உயர்வு. மாயப் பெருமானே - குணத்தால் வந்த உயர்வு. மா மாயவனே - செயல்களால் வந்த மேன்மை.
என்று என்று மாலே ஏறி - இவ்விடமான வைலக்ஷண்யத்தை நினைத்து, ‘நான் அயோக்கியன்’ என்று
அகலும்படி பிச்சு ஏறி, மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்-தன்னை முடித்துக் கொள்வதாகக்
கழுத்திலே கயிற்றை இட்டுக்கொண்டவனை அறுத்து விழ விடுவாரைப் போன்று, அகன்று முடியப்புக்க
இவரைப் பொருந்த விட்டுக்கொள்ள, அவன் அருளாலே பொருந்தின ஆழ்வார். 2பிடிதோறும்
நெய் ஒழியச் செல்லாத சுகுமாரரைப் போன்று, நின்ற நின்ற நிலைகள்தோறும் இறைவன் திருவருள்
ஒழிய நடக்கமாட்டாதவர் ஆதலின், ‘மால் அருளால் மன்னு சடகோபன்’ என்கிறார். பால்
ஏய் தமிழர் - பால் போலே இனிய தமிழையுடையவர்கள். இசைகாரர் - இயலுக்கு இசைய இசையிட வல்லவர்கள்.
அவர்களாவார், ஸ்ரீமதுரகவிகளையும் நாதமுனிகளையும் போல்வார். பத்தர் - 3‘கால்
ஆழும் நெஞ்சு அழியும் கண்சுழளும்’ என்று இருக்குமவர்கள். 4ஆழ்வான்
ஒரு முறை ‘ஸ்ரீ பராங்குச நம்பியைப் பாலேய் தமிழர் என்கிறது; இசைகாரர் என்றது, ஆழ்வார்
திருவரங்கப்பெருமாள் அரையரை; பத்தர் என்றது, பிள்ளை யுறங்கா வில்லி தாசரை’
என்று பணித்தார். ஸ்ரீ ஆளவந்தார் பாலேய் தமிழர் என்கிறது, முதலாழ்வார்களை;
இசைகாரர் என்கிறது, திருப்பாணாழ்வாரை; பத்தர் என்கிறது, பெரியாழ்வாரை’
என்று அருளிச்செய்வர். ஆக, இயல் அறிவார் இசை
1. இத்திருப்பதிகத்தின் முதல் பாசுரத்தில் ‘வானோரிறையை’ என்றும்,
‘வெண்ணெய் தொடு உண்ட’ என்றும்
அருளிச்செய்ததை ஈண்டு ‘மாலே’
என்ற பெயராலும், ‘மாயப் பெருமானே’ என்ற பெயராலும் அநுவதிக்கிறார்
என்றபடி. ஈண்டு ‘மாமாயவனே’ என்றது, அப்பாசுரத்தில் ‘இள ஏறு ஏழுந்
தழுவிய’ என்றதன் அநுவாதம்.
குணங்களும் செயல்களும் ஆச்சரிய
ரூபங்கள் ஆகையாலே ‘மாய’ சப்தத்தால் அவற்றை அருளிச்செய்கிறார்.
2. பிடி - ஒரு பிடி சோறு.
3.
பெரிய திருவந்தாதி. 34.
4. ஆழ்வான் - கூரத்தாழ்வார்.
|