|
யற
யறிவார், பகவானுடைய குணங்களில்
ஈடுபட்டு இருப்பார் ஆகிற இவர்கள், பரவும்-இவர் அகலுகை தவிர்ந்து பாடின பின்பு உண்டான உலகத்தாரின்
1பரிக்கிரகத்தைச் சொல்லுகிறார். ஆயிரத்தின்பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு
- ‘கடலிலே முத்துப்பட்டது’ என்னுமாறு போன்று, சிறப்பையுடைய ஆயிரத்தின் நடுவே பொருந்தி
இருக்கிற இத்திருவாய்மொழியை வல்லார்க்கு. பரிவது இல்லை-‘அஞ்சிறைய மடநாராய்’ என்னும் திருவாய்மொழியில்
தூது விட்டு, இறைவன் வந்து காட்சி அளித்தவாறே ‘தாழ்ந்தவன்’ என்று அகன்று படும் துக்கம் இல்லை.
முதற்பாட்டில்,
‘அயோக்கியன்’ என்று அகன்றார்; இரண்டாம் பாட்டில், ‘அகலுவதற்கும் நான் அதிகாரி அல்லேன்’
என்றார்; மூன்றாம் பாட்டில், சிலகுணத்தைக் காட்டித் துவக்கத் துவக்கு உண்டார்; நான்காம் பாட்டில்,
‘அகல ஒட்டுவார்களோ உடையவர்கள்?’ என்றார்; ஐந்தாம் பாட்டில், ‘உடைய உன் திருவடிகளைக் கிட்டும்படி
பார்த்தருளல் வேண்டும்,’ என்றார்; ஆறாம் பாட்டில், அவன் அரைக்கணம் தாழ்க்க,
‘முடியப்புகுகின்றேன்’ என்றார்; ஏழாம் பாட்டில், அவ்வளவில் இறைவன் வரக்கொள்ள, ‘அயோக்கியன்’
என்று அகன்றார்; எட்டாம் பாட்டில், ‘திருவாய்ப்பாடியில் வெண்ணெயைப்போன்று உம்முடைய சம்பந்தம்
தாரகம்,’ என்றான் இறைவன்; ஒன்பதாம் பாட்டில், ‘அப்படி அன்று; இது நஞ்சு,’ என்ன,
‘நஞ்சுதானே நமக்குத் தாரகம்?’ என்றான்; பத்தாம் பாட்டில், தம்மை இசைவித்துப் பரமபதத்தை
அலங்கரிக்கத் தொடங்கினான் என்றார்; முடிவில், கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.
திருவாய்மொழி
நூற்றந்தாதி
வளமிக்க
மால்பெருமை மன்உயிரின் தண்மை
உளமுற்று அங்கு
ஊடுருவ ஓர்ந்து - தளர்வுற்று
நீங்கநினை மாறனைமால்
நீடுஇலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான்
பரிந்து.
(5)
ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.
1.
பரிக்கிரகம் - அங்கீகரித்தல்; வைப்பாகக் கொள்ளுதல்.
|