|
ஆற
ஆறாந்திருவாய்மொழி -
‘பரிவதில் ஈசனை’
முன்னுரை
ஈடு : முதல் திருவாய்மொழியிலே, இறைவன் எல்லாரினும் அறப்பெரியவனாய்
இருக்கிறபடியை அனுபவித்தார்; இரண்டாந் திருவாய்மொழியிலே, ‘இப்படிப் பரனானவனை வழிபடுமின்,’
என்றார், மூன்றாந்திருவாய்மொழியிலே, அவ்வழிபாட்டிற்கு உறுப்புகளாக அவனுடைய எளிமையையும், நான்காந்
திருவாய்மொழியிலே, அவனுடைய பொறையுடைமைக்குணத்தையும், ஐந்தாந்திருவாய் மொழியிலே, அவனுடைய
சீலகுணத்தையும் அருளிச்செய்தார்; ‘இவை எல்லாம் உண்டாயினும், 1பரிமாற்றத்தில்
அருமை இருக்குமாகில் பசை இல்லை அன்றே?’ என்ன, ‘அது வேண்டா; எளிதில் ஆராதிக்கத்தக்கவன்’
என்கிறார் இத்திருவாய்மொழியில்.
‘யாங்ஙனம்?’ எனின்,
2மிகச்சிறியோர்களான இம்மக்களாலே மிகச்சிறியபொருள்களைக் கொண்டு சர்வேஸ்வரனான
நம்மை அடைந்து தலைக்கட்டப் போகாமையாலே, மேல் திருவாய்மொழியிலே, ‘தாழ்ந்தவன்’ என்று
அகன்ற இவரைப் பொருந்தவிட்டுக்கொண்டோம்; ‘பெருந்தவிட்டுக்கொண்டதுதான் ஒரு பரிமாற்றத்துக்கு
அன்றோ? அதற்கு ஒரு பிரயோஜனம் கண்டோம் இல்லையே!’ என்று இருப்பான் ஒருவன் இறைவன். இனி,
‘சம்சாரியான இவனாலே நேர்கொடு நேர் அடைந்து தலைக்கட்ட ஒண்ணாதபடி, இறைவன் ஒன்றிலும்
விருப்பம் இல்லாதவனாய் இருக்கையாலும், இவன் இட்டது கொண்டு திருப்தனாக வேண்டாதபடி பரிபூர்ணனாய்
இருக்கையாலும்
1. பரிமாற்றம் என்பது, இங்குத் திரு ஆராதனத்தைக் குறித்தது.
2.
‘பரிமாற்றத்தில் அருமை இல்லை’ என்பதனை இரண்டு வகையால் விளக்கி
அருளிச்செய்கிறார். ஒன்று,
‘மிகச்சிறியோர்களான இம்மக்களாலே’ என்றது
முதல் ‘இருப்பான் ஒருவன் இறைவன்’ என்பது முடிய,
ஆண்மாக்களின்
நிலையை நினைக்குமிடத்துப் பரிமாற்றத்திலுள்ள அருமையைக் கூறி,
அதனைக் கண்டு
அஞ்ச வேண்டா என்பதற்குக் காரணத்தை
அருளிச்செய்கிறார். ‘அகன்ற இவரை’ என்றது, ஆழ்வாரை,
ஆழ்வாரைக்
கூறியது, மற்றை ஆன்மாக்களுக்கு எல்லாம் உபலக்ஷணம். ‘ஒரு
பரிமாற்றத்துக்கு அன்றோ?’
என்றது, ‘அயோக்கியன் என்று அகன்ற
இவரைப் பொருந்த விட்டுக்கொண்ட சௌசீல்ய குணத்தை நினைத்து
எல்லாரும் அடைந்து தொண்டு செய்வதற்கன்றோ?’ என்றபடி. மற்றொன்று,
‘சம்சாரியான இவனாலே,
என்றது முதல் ‘இறைவன் தன் பேறாக
நினைத்திருப்பான்’ என்பது முடிய, இறைவனுடைய நிலைகளை
நினைக்குமிடத்துப்
பரிமாற்றத்தில் இருக்கும் அருமையைக் கூறி,
‘அந்நிலைகளைக் கண்டு அஞ்ச வேண்டா; அந்நிலைகளே
பற்றுதற்கு
உறுப்புகளாக இருக்கும்’ என்று அருளிச்செய்கிறார்.
|