இவ
இவ்விரண்டற்கும் காரணமாகத்
1திருமகள் கேள்வனாய் இருக்கையாலும் இவன் அவ்விறைவனை அடைந்து ஆராதனை புரிதல்
முடியாதே?’ எனின், அங்ஙனம் அன்று; இவன் இடுவதற்கு மேற்படத் தனக்கு வேறு ஒன்று தேட வேண்டாதபடி
எல்லாம் கைப்புகுந்திருப்பான் ஒருவன் ஆகையாலும், இவன் இட்டது கொண்டு திருப்தனாக வேண்டாதபடி
பரிபூர்ணனாயிருக்கையாலே இவன் பக்கல் பெற்றது கொண்டு முகங்காட்டுகைக்கு அதுவே காரணமாய்
இருக்கையாலும், திருமகள் கேள்வனாகையாலேசுசீலனாய் இருக்கையாலும், இப்படிகள் அனைத்தும் அடைவதற்கு
உறுப்புகளேயாகும் என்கிறார். ஆக, இவன், தன் சொரூப லாபத்திற்கு உறுப்பாகத் தொண்டினைச் செய்வான்;
இதனை இறைவன் தன் பேறாக நினைத்திருப்பான் என்றபடி. ஆதலால், மற்றைத் தெய்வங்களை அடைதல்
போன்று, பகவானை அடைதல் 2அருமைப்பட்டு இராது என்கிறார் என்றபடி. மேலும், பகவானை
அடைந்த அளவில் 3விரோதிகள் அடங்கலும் நசிக்கும்: பகவானை அடைதல் துக்க ரூபமாய்
இராது, இன்பமயமாய் இருக்கும்; வருந்தி ஒன்றும் தேட வேண்டாதபடி பெற்றது போதியதாக இருக்கும்;
பகவானைப் பற்றுதல் ஆகையாலே வணங்கும் முறைகளில் சிறிது பிறழினும் கேடு வருவதற்கு இடன் இல்லை;
திரவிய நியதி இல்லை, கால நியதி இல்லை, அதிகாரி நியதி இல்லை; இப்படி இருக்கையாலே
இறைவனை அடைதல் எளிது; ஆதலால், ‘அடைமின்’ என்கிறார்.
4‘உன்னுடைய
திருவடிகளைக் குறித்து ஒரு காலத்தில் ஒருவன் எவ்விதத்திலாயினும் ஒரு முறை அஞ்சலி செய்யமுயற்சி
செய்வானே
1.
‘திருமகள் கேள்வனாகையாலே சுசீலனாகையாலும்’ என்றது, ‘அவளுடைய
சம்பந்தம் அவளுடைய மக்களிடத்தில்
சௌசீல்யத்துக்கு ஏது,’ என்றபடி.
2.
‘அருமைப்பட்டிராது’ என்றது, ‘புரிவதுவும் புகை - பூே்வ’ என்றதனை
நோக்கி.
3. இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘வல்வினை மாள்வித்து’ என்றதனை
நோக்கி, ‘விரோதிகளடங்கலும்
நசிக்கும்’ என்கிறார்; ‘அமுதிலும் ஆற்ற
இனியள்’ என்றதனை நோக்கி, ‘இன்பமயமாகவிருக்கும்’
என்கிறார்;
‘புரிவதுவும் புகை பூவே’ என்றதனை நோக்கிப் ‘பெற்றது போதியதாய்
இருக்கும்’ என்கிறார்;
முதலிரண்டு பாசுரங்களை நோக்கித் ‘திரவிய நியதி
இல்லை, அதிகாரி நியதி இல்லை,’ என்கிறார்.
4.
‘உன்னுடைய’ என்றும், ‘பச்சிலை மலர்’ என்றும், ‘ஸ்ரீகிருஷ்ணனானவன்’
என்றும், ‘இறைவனாகிய தன்னை’
என்றும் தொடங்கும் பொருள்களையுடைய
சுலோகங்கள் ‘இறைவனை அடைதல் எளிது’ என்பதற்குக் காட்டப்படும்
வேறு பிரமாணங்கள்.
|