ய
யாயின், செய்யப்படும்
அவ்வஞ்சலியினால், அப்பொழுதே பாவங்கள் அனைத்தும் அடியோடே ஓடிவிடுகின்றன; மேலும், அவ்வஞ்சலியானது,
புண்ணியங்களைக் கொடுத்துப் போஷித்துத் தானும் அழியாமல் இருக்கின்றது,’ என்பது தோத்திர
ரத்தினம். இங்கு, ‘உன்னுடைய திருவடிகள்’ என்றதனால், மற்றைத் தேவர்களைக் காட்டிலும்
இறைவனுக்கு உண்டான வேற்றுமையும், இறைவனிடத்தில் அடியார்கள் இழியுந்துறை திருவடிகள் என்னுமிடமும்
அருளிச்செய்தாராவார். மேலும், ‘ஒரு காலத்தில்’ என்றதனால், இன்ன காலத்தில் இன்ன
காரியங்களைச் செய்யவேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும், ‘ஒருவன்’
என்றதனால், இந்தத் தகுதிகளையுடையவனே இக்காரியத்தை மேற்கோடல் வேண்டும் என்று விதிக்கிற
விதியினின்று வேறுபடுத்தியும், ‘எவ்விதத்தாலாயினும்’ என்றதனால், இன்ன முறையில் இக்காரியத்தைச்
செய்தல் வேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறு படுத்தியும், ‘ஒரு முறை’ என்றதனால்,
பல வருடங்கள் செய்ய வேண்டும் என்று விதிக்கிற தீர்க்க சத்திரம் முதலான யாகங்களினின்று வேறுபடுத்தியும்,
‘அஞ்சலி’ என்றதனால், மிக்க பொருட் செலவினாலும் சரீரத்தின் பிரயாசை முதலியவற்றாலும்
செய்யப்படுகின்ற அஸ்வமேதயாகம் முதலியவற்றினின்று வேறுபடுத்தியும், ‘பாவங்கள்’ என்ற
பன்மையால், ஒரு தர்மம் ஒரு பாவத்தையே போக்கும் என்று கூறப்படுகிற தர்மங்களினின்று வேறுபடுத்தியும்,
‘அடியோடே’ என்றதனால், வாசனை கிடக்கப்போக்கும் கர்மங்களினின்று வேறுபடுத்தியும்,
‘புண்ணியங்களை’ என்ற பன்மையால் ஒரு தர்மம் ஒரு பலனையே கொடுக்கும் என்று கூறப்படுகிற
தர்மங்களினின்று வேறுபடுத்தியும், ‘அழியாமலிருக்கின்றது’ என்றதனால், பலன்களைக்
கொடுத்துத் தாம் அழிந்து போகிற தர்மங்களினின்று வேறுபடுத்தியும் அருளிச்செய்திருத்தல் நோக்கல்
தகும். மற்றும், ‘ஓடிவிடுகின்றன’ என்றதனால், 1சும் எனாதே கைவிட்டு ஓடித்
தூறுகள் பாய்ந்தனவே’ என்கிறபடியே, பாவங்கள், இவன் தான் தொடர்ந்து பிடிப்பான் என்று நினைத்து
இவனை அறியாமலே போய் விடும் என்பதனையும், ‘கொடுத்துப் போஷிக்கிறது’ என்றதனால்,
தீவினைகளைப் போக்குதலேயன்றி, அது போன இடம் எங்கும் நன்மையினையே நிறையச்செய்யும் என்பதனையும்
தெரிவித்தவராவர்.
1.
பெரியாழ்வார் திருமொழி. 5. 4 : 3.
|