பட
பட்டர்
இங்ஙனம் அருளிச்செய்தவாறே, ‘இறைவனுக்குக் கண்டங்கத்தரிப்
பூவை அருச்சித்தல் கூடாது என்று சாத்திரங்கள் விதிக்கின்றனவே!’ என்று நஞ்சீயர் கேட்க,
‘அவனுக்கு ஆகாது என்கிறது அன்று; பறிக்கிற அடியார் கையில் முள்பாயும் என்பதற்காகத் தவிர்த்தன
காணும்! 1‘கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும் ஆம்பலும் முன்
கண்டக்கால்’ என்று இறைவனுக்கே உரிய திருத்துழாயோடு அதற்கு வேறுபட்ட பூக்களையும் ஒரு சேர எடுத்துத்
திருமங்கை மன்னன் அருளிச் செய்கிறது கண்டீரே! இதனால், இறைவன் பொருளில் ஏற்றத் தாழ்வு
பார்ப்பது இன்று என்பது விளங்குமே! மற்றும், பிரகிருதி சம்பந்தம் இல்லாத பொருள்தான் வேண்டும்
என்று இருந்தானாகில், 2‘புள்ளாய் ஓர் ஏனமாய்’ அவதரிப்பானோ! ஸ்ரீவைகுண்டத்தில்
இரானோ?’ என்று அருளிச்செய்தார். பின்னர் ‘நஞ்சீயர்’ வராக புராணம் பார்த்துக்கொண்டு
வரும்போது ‘ஸ்ரீவராக நாயனார்க்கு 3முத்தக்காசை அமுது செய்விப்பது’ என்று அதில்
கூறப்பட்டிருத்தலைக்கண்டதும் ‘இது என்ன மெய்ப்பாடுதான்!’ என்று மிகவும் ஈடுபட்டவரானார்.
(1)
57
மதுவார் தண்அம்
துழாயான்
முதுவேத முதல்வ
னுக்கு
எதுஏது என்பணி
என்னா
ததுவே ஆட்செய்யும்
ஈடே.
பொ-ரை : ‘தேன் ஒழுகுகின்ற குளிர்ந்த அழகிய திருத்துழாய்
மாலையைத் தரித்த பழமையான வேதங்களால் கூறப்படுகின்ற இறைவனுக்குச் செய்யப்படும் தொண்டுகள்
எத்துணைப் பெருமை வாய்ந்தவை! ஆதலால், நான் செய்யும் தொண்டு யாது உளது?’ என்னாததுவே இறைவனுக்குத்
தொண்டுகளைச் செய்தற்கு உரிய தகுதியாம்
வி-கு : வேதமுதல்வன்
- ‘வேத முதல்வன் என்ப, தீது அற விளங்கிய திகிரி யோனே’ என்பது நற்றிணை. ‘பணி எது? என்
பணி ஏது?’ எனப் பிரித்துக் கூட்டுக.
1.
பெரிய திருமொழி. 11. 7 : 6.
2.
மேற்படி மேற்படி
3.
முத்தக்காசு - கோரைக் கிழங்கு.
|