ஈ
ஈடு :
இரண்டாம் பாட்டு. ‘அடைகின்ற அடியார்கட்குப்
பொருளில் குறை பார்த்து அகல வேண்டா,’ என்றார் முதற் பாசுரத்தில்; ‘நான் அதிகாரி அல்லேன்
என்று அகல வேண்டா.’ என்கிறார் இப்பாசுரத்தில்.
‘‘புரிவதுவும் புகை பூவே’ என்கிறார் மேல்; ‘மதுவார் தண் அம் துழாயான்’ என்கிறார் இங்கு; இது சேரும்படி என்?’
எனின், 1‘பூவாகில் மதுவோடே கூடியல்லது இராமையாலே சேரும்’ என்று சொல்லுவர்கள்;
‘வதுவார் தண் அம் துழாயான்’ என்று பாடமான போது சாலப் பொருந்தும்; வதுவை-மணம்; அது கடைக்குறைந்து
‘வது’ என நிற்கின்றது.
மது வார் தண் அம்
துழாயான் - ஒரு வாடல் மாலையைக் கொணர்ந்து திருக்குழலிலே வளையமாக வைத்தால், திருக்குழலின்
பரிசத்தால் செவ்வி பெற்று, மது நிரம்பிச் 2சினையாறு பட்டு, ஒழுகி வெள்ளமிடாநிற்கும்.
முது வேத முதல்வனுக்கு - ‘இவ்வொப்பனை அழகினைப் பேசும்போது இன்னமும் பாசி பூத்த வேதம் பேச வேண்டாவோ?’
என்பார், ‘மதுவார் தண்ணந்துழாயான்’ என்றதனையடுத்து, ‘முது வேத முதல்வன்’ என்கிறார்.
நித்தியமாய்ப் புருஷனால் செய்யப்படாததாய் உள்ள வேதங்களால் சொல்லப்பட்டவனுக்கு. வேத முதல்வன்
என்பது, 3‘வேதவாக்கியங்களையே பிரமாணமாகக் கொண்டவன்’ என்கிறபடியே, வேதங்களால்
சொல்லப்பட்டவன் என்கை. ‘மதுவார் தண் அம் துழாயான்’ என்கையாலே, எல்லாரினும் அறப்பெரியவன்
என்பதனைத் தெரிவித்தபடி, ‘முதுவேத முதல்வன்’ என்கையாலே, பரிபூர்ணன் என்பதனைத் தெரிவித்தபடி.
இவ்விரண்டும் எளிதில் ஆராதிக்கத் தக்கவன் என்பதற்கு உறுப்புகள்.
எது ஏது என் பணி
என்னாததுவே ஆட்செய்யும் ஈடு - ‘முதுவேத முதல்வனுக்கு எது பணி?’ என் பணி ஏது?’ என்னாததுவே ஆட்செய்கைக்கு
அதிகாரமாவது அதாவது, நித்தியசூரிகள் அலரோ அவனுக்குத் தகுதியாக அடிமை செய்ய வல்லார்? நான்
செய்யுமது ஏது?’ என்று தன்னைக்கொண்டு கைவாங்காது ஒழியுமதுவே ஆட்செய்கைக்கு அதிகாரம் என்றபடி.
இனி, இதற்கு ‘இது அவ்
1. இதனை, ‘ஆகுபெயர் அந்தாதித்தொடை’ என்பர் மாறன் அலங்கார
உரைகாரர்.
2.
சினையாறுபடுதல் - ஆறு நீர் வரவு அணித்தானால் பொசிந்து உள்ளே
தண்ணீர் உண்டாகி இருத்தல்.
3. உத்தர மீமாம்சை, 1. 1 : 3.
|