வ
விறைவனுக்குத் தகுதி அன்று,’
என்றுசிலவற்றை விடாதே, எல்லாக் கைங்கரியங்களிலும் சேர்ந்து அடிமை செய்வதுமே ஆட்செய்கைக்கு
அதிகாரமாவது என்று பொருள் கூறலுமாம்.1
(2)
58
ஈடும் எடுப்பும்இல்
ஈசன்
மாடு விடாதுஎன்
மனனே
பாடும்என் நாஅவன்
பாடல்
ஆடும்என் அங்கம்
அணங்கே.
பொ-ரை : தாழ்ந்தவன் என்று ஒருவனை ஏற்றுக்கொள்ளாது விடுதலும்,
உயர்ந்தவன் என்று ஒருவனை ஏற்றுக்கோடலும் இல்லாத இறைவனுடைய பக்கத்தை என் மனம் விடாது; என்
நாக்கும் அவன் பாடல்களையே பாடும்; என் சரீரமும் தெய்வம் ஏறியவர்களைப்போன்று ஆடாநிற்கும்.
வி-கு : ஈடு
- முதனிலை திரிந்த தொழிற்பெயர். மாடு - பக்கம். அணங்கு-தெய்வமகள் என்பர் பரிமேலழகர்.
(திருக்குற. 1081.) ‘ஈடும் எடுப்பும் இல் ஈசன்’ என்ற தொடர், ‘தனக்கு உவமை இல்லாதான்’
என்ற திருக்குறளின் பொருளை விரித்துக்கூறுதல் போன்று அமைந்துள்ளது.
ஈடு :
மூன்றாம் பாட்டு. இறைவனுடைய 2சுபாவத்தை நினைந்து,
3தாம் அதிகரித்த காரியத்தை மறக்கும்படி தம்முடைய மனம் வாக்குக் காயங்களுக்கு
அவன் பக்கல் உண்டான காதற் பெருக்கினை அருளிச்செய்கிறார்.
ஈடும் எடுப்பும் இல்
ஈசன் சிலரை வெறுத்தல், சிலரை ஏற்றுக்கோடல் செய்யாத சர்வேஸ்வரன். இறைவனுக்கு ஆத்துமாக்கள்
பக்கல் உண்டான சம்பந்தம் சர்வ சாதாரணமாய் இருக்கையாலே சிலரை விடப்போகாது அன்றே?
4‘தேவர்கட்கும் தானவர்கட்கும் நீயே தெய்வம்’ என்கிறபடியே, ஏற்றுக்கொள்ளுமவன் பக்கலுள்ள
சம்பந்தம் விடுமவன் பக்கலிலும் உண்டு ஆதலின், ‘ஈடும் எடுப்பும்
1. இங்கு
அருளிச்செய்த இரு வகைப் பொருள்களுள் முதற் பொருள்,
அதிகாரியினுடைய தாழ்விலே நோக்கு. இரண்டாவது
பொருள்,
கைங்கரியத்தினுடைய தாழ்விலே நோக்கு. அதாவது, ‘உள்ளோடு புறம்போடு
வாசியற எல்லாக்
கைங்கரியத்திலும் சேர்தல் வேண்டும்,’ என்றபடி.
2. சுபாவம் -
எளிதில் ஆராதிக்கத்தக்க தன்மை.
3. அதிகரித்த
காரியம் - பரோபதேசம்.
4. ஜிதந்தா. 1 : 2.
|