இல
இல் ஈசன்’
என்கிறார். ஈசன் மாடு விடாது என் மனனே - ஒரு சாதனத்தைக் கருதிக் கிட்டினேனாகில் அன்றே
பலம் கைப்புகுந்தவாறே விடுவேன்? நான் மேற்கொண்ட காரியத்துக்கு எனக்கு நெஞ்சு ஒழிகிறது இன்று.
‘மனத்தின் துணை வேண்டுமோ உமக்கு’? 1‘நாஇயலால் இசைமாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்’
என்பது அன்றோ உம்முடைய தன்மை? ஆதலால் உம்முடைய மனத்தோடு படாத சொற்களே அமையாதோ எங்களுடைய
நலனுக்கு?’ என்ன, பாடும் என் நா அவன் பாடல் - என்னுடைய நாவும் மனம் மேற்கொண்ட காரியத்தையே
மேற்கொண்டது. ‘ஆயின், உம்முடைய 2ஹஸ்த முத்திரை அமையாதோ எங்களுக்குப் பொருள்
நிச்சயம் பண்ணுகைக்கு?’ என்ன, ஆடும் என் அங்கம் அணங்கே - அதுவும் அவன் விஷயத்திலேயே அன்பு
கொண்டதாயிற்று.
(3)
59
அணங்குஎன
ஆடும்என் அங்கம்
வணங்கி வழிபடும்
ஈசன்
பிணங்கி
அமரர் பிதற்றும்
குணங்கெழு
கொள்கையி னானே.
பொ-ரை : நித்தியசூரிகள் (இறைவனுடைய குணங்களைக்
கூறத் தொடங்கி, ‘யான் முன்னர், யான் முன்னர்’ என்று ஒருவர்க்கொருவர்) மாறுபட்டுக் (குளிர்காய்ச்சல் வந்தவர்களைப் போன்று) பிதற்றுவதற்குக் காரணமான நற்குணங்கள் எல்லாம்
பொருந்தியிருக்கும் தன்மையுடையவனான ஈசனை அனுபவித்துத் தெய்வம் ஏறியவர்களைப் போன்று ஆடுகின்ற
எனது உடலானது எப்பொழுதும் அவனையே வணங்கி வழிபடாநின்றது.
வி-கு :
ஆடும்-பெயரெச்சம். வழிபடும்-முற்று. சொற்களைக்
கொண்டு கூட்டாது, ஆற்றொழுக்காகப் பொருள் கூறலுமாம். அங்ஙனங் கூறுங்கால், ‘வழிபடும்’ என்பது
எச்சம்.
ஈடு :
நான்காம் பாட்டு. தம்முடைய மனம் வாக்குக் காயங்கட்கு
அவன் பக்கல் உண்டான காதற்பெருக்கு ஒரு காலத்தில் தோன்றி மறைதல் இன்றி, நித்தியசூரிகளைப்போலே
யாத்திரையான படியைச் சொல்லுகிறார்.
அணங்கு என ஆடும்
என் அங்கம் வணங்கி வழிபடும் ஈசன் - தெய்வம் ஏறியது என்னலாம்படி ஆடுகிற என் அங்கம் வணங்கி
1. திருவாய். 5. 4 : 4.
2. ஹஸ்த முத்திரை - திருக்கை ஞான முத்திரை.
|