அ
அதுதானே யாத்திரையாய்ச்
செல்லும்படி இருக்கிற ஈசன். பிணங்கி அமரர் பிதற்றும் குணம் கெழு கொள்கையினான் - தாம் தாம்
அகப்பட்ட குணங்களைச் சொல்லி, ‘நான் முந்துறச்சொல்ல, நான் முந்துறச்சொல்ல’ என்று பிணங்கி
நித்தியசூரிகள் ஜன்னி சுரம் வந்தவர்களைப்போன்று அடைவு கெடக் கூப்பிடுகிற குணங்கள் வந்து
சேருகைக்கு இருப்பிடமானவன். அதாவது, 1‘இரத்தினாகரம் போலே குணங்கள்
சேருகைக்குக் கொள்கலமானவன்’ என்றபடி. இனி, ‘குணம் கெழு கொள்கையினான்’ என்பதற்கு, குணங்கள்
வந்து கெழுமுகையைச் சுபாவமாக உடையவன்’ என்று பொருள் கூறலுமாம். கெழுமுகை-சேர்கை.
இனி, 2இத்திருப்பாசுரத்தால்,
முற்றறிவினர்கள் படுகிற பாடு என்னுடைய கரணங்களுக்கும் உண்டாகாநின்றது என்கிறார்’ எனலுமாம்.
(4)
60
கொள்கை
கொளாமை இலாதான்
எள்கல் இராகம்
இலாதான்
விள்கல்
விளாமை விரும்பி
உள்கலந் தார்க்குஓர்
அமுதே.
பொ-ரை : குணம் பார்த்துக் கொள்ளுகையும் குணம் இன்மையைப்
பார்த்துக் கை விடுகையும் இல்லாதவன்; கைவிடுகைக்குக் காரணமான வெறுப்பும் கைக்கொள்ளுகைக்குக்
காரணமான விருப்பும் இல்லாதவன்; வேறு பலன்களைக் கொண்டு தன்னை விட்டு நீங்குகையையும் வேறு
பலனை விரும்பாதவர்களாய்த் தன்னை நீங்காது ஒழிகையையும் விரும்பிப் பார்த்து, உள் கலந்தார்க்கு
ஒப்பற்ற அமிர்தம் ஆவான்.
வி-கு :
‘வேண்டுதல் வேண்டாமை இலான்’ என்றார் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார். இலாதான் - தொழிற்பெயர்.
எள்கல்-இகழ்தல். இராகம்-ஆசை. விள்கை-பிரிதல். விள்ளாமை-பிரியாமை. ‘விரும்பி அமுது ஆவான்’
என இயையும்.
1. இரத்தினாகரம் - கடல்.
2.
‘இனி, இத்திருப்பாசுரத்தால்’ என்று தொடங்கும் பொருளுக்குத் தக,
‘பிணங்கியமரர் பிதற்றும் குணங்கெழு
கொள்கையினானான ஈசனைக்
கண்டு அணங்கென ஆடும் என் அங்கம் வணங்கி வழிபடும்,’ எனச்
சொற்களைக்
கூட்டி முடிக்க.
|