பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
28

New Page 1

துன்பங்களையுடையராய், அவனை அல்லது அறியாதபடியாய் இருக்கிற இவர் பகவானை அநுபவிக்கும் சுகம் மிக்க போது மற்றைப் பொருள்களும் எல்லாம் தம்மைப் போன்றே எம்பெருமானைப் பெற்றுச் சுகிக்கின்றனவாகவும், பிரிவு என்று ஒரு வகை உண்டு என்றும் அறியாமல், உலக நடப்பினைப் போன்றே மறந்திருப்பார்; பிரிவின் துயரம் மிக்கால், புணர்ச்சி இன்பம் உண்டு என்றும் அறியாமல் மற்றைப் பொருள்களும் எல்லாம் தம்மைப் போன்றே எம்பெருமானைப் பிரிந்து நோவுபடுகின்றனவாகக் கொண்டு, 1‘நீயும் திருமாலால் நெஞ்சங்கோட் பட்டாயே’ இன்னோரன்ன பாசுரங்களாலே அவற்றுக்குமாகத்தாம் நோவுபடாநிற்பர். ஆக, இவர்க்கு இன்ப துன்பங்கள் ஒரு காலும் முடியாமல் மாறிமாறி உண்டாய் இருக்கையாலே இவர்க்கு 2சிந்தயந்தியின்படி நித்தியமாய்ச் செல்லுகையால் நம் முதலிகள் இவரைத் ‘தீர்க்க சிந்தயந்தி’ என்று அருளிச் செய்வர்கள். 

     ‘நன்று; ஆயின், சேதநர்கட்குப் பெண்கள் சோறு தண்ணீர் முதலியவைகளே 3நிலைத்து இருக்கச்செய்வனவாயும் வளரச் செய்வனவாயும் நுகரப்படுவனவாயும் செல்லாநிற்க, இவர் பகவானுடையகுணங்களாலேயே தரித்து இருப்பவர் என்னுதல் கூடுமோ?’ என்னில், திருவயோத்தியிலும் கோசல நாட்டிலும் உள்ள நிலையியற் பொருள் இயங்கியற்பொருள்கள் அனைத்தும் ஸ்ரீ ராமபிரானுடைய குணங்களையே நுகர்ந்து அதனாலேயே தரித்திருந்தன என்று ஸ்ரீ ராமாயணம் கூறுகின்றது ஆதலான், இதுவும் பொருந்தும் என்க. 

     இப்படி இருக்கிற இவர்க்கு எம்பெருமானோடு சேர்க்கையாவது, நேரிற்கண்டாற்போன்று அறிவினாற்காண்டல். பிரிவாவது, புறக்கண்களால் காணல் வேண்டும் என்று விரும்பி அது பெறாமையாலே மனத்தின் அநுபவத்துக்கு வந்த கலக்கம். ‘முற்றறிவினனாய் வரம்பில் ஆற்றலுடையவனாய் எல்லாரையும் நியமிக்கின்றவனாய் எல்லையற்ற அருட்பெருங்கடலாய் இருக்கும் எம்பெருமான், இவருடைய அநுபவத்தை முடிய நடத்தாதே, இவ்வநுபவத்தைப் பிரித்ததற்குப் பயன் என்?’ என்னில், திருவயோத்தியிலும் கிருஷ்ணாவ

 

1. திருவாய்மொழி, 2. 1 : 1.
2. 36-ஆம் பாசுரம் வியாக்கியானம் பார்க்க.
3. தாரக போஷக போக்கியங்கள்.