|
த
தாரத்தில்1
திருக்குரவையிலும் பிரிந்த பிரிவு போன்று, இவர்க்கு 2அநுபவித்த குணங்களைப் பொறுப்பித்தலும்,
3மேன்மேலென வேட்கை பிறப்பித்தலும் பயன் ஆம். ஆயின் ஆழ்வார்க்குச் சோக மோகங்கள்
உண்டாகக் காரணம் யாது?’ எனின், எம்பெருமான் பக்கல் பிறந்த காதல் முதிர்ந்து நினைத்தபடி பெறாமற்போனவாறே
சோக மோகங்கள் பிறந்தன. 4இப்படியுள்ள சேர்க்கையாலும் பிரிவாலும் ஆழ்வார்க்கு
வந்த நிலையே 5அந்யாபதேசப் பேச்சைப் பேசுவித்தது.
இப்பிரபந்தங்களிலுள்ள
ஸ்ரீ சூக்திகளுள்6 சில, அடையத்தக்கவனான எம்பெருமானுடைய சொரூபத்தை எடுத்து விளக்குவனவாக
இருக்கும்; 7சில, அடைகின்ற ஆத்துமாவின் விஷயமாக
1.
குரவை என்றது, காமமும்
வென்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள்
பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கை
பிணைத்தாடுவது. ‘குரவை என்பது கூறுங் காலைச், செய்தோர் செய்த காபமும்
விறலும், எய்த உரைக்கு
மியல்பிற் றென்ப,’ எனவும், ‘குரவை என்பது எழுவர்
மங்கையர், செந்நிலை மண்டலக் கடகக் கைகோத்து,
அந்நிலைக்கொப்பநின்றாட லாகும்’, எனவும் சொன்னாராகலின். இதுவும்
ஆய்ச்சியரிடத்து நிகழ்தலான்
ஆய்ச்சியர் குரவையெனக் கூத்தாற்பெற்ற பெயர்
என்பர் அடியார்க்கு நல்லார்.
(சிலப். பதிகம்).
2.
‘ஆற்ற நல்ல வகைகள் காட்டும் அம்மானை’ என்ற திருப்பாசுரப் பகுதியை
நோக்கி, ‘அநுபவித்த குணங்களைப்
பொறுப்பித்தலும்’ என்கிறார்.
3.
‘காதல் கடல்புரைய விளைவித்த காரமர்மேனி தங்கண்ணண்’ என்னும்
பகுதியை நோக்கி, ‘மேன்மேலென
வேட்கை பிறப்பித்தலும்’ என்கிறார்.
4. இவ்வாறு உண்டாகும் சேர்க்கையும் பிரிவுமே காரணங்கள், ஆழ்வார்
அகப்பொருள் துறைகள் அமைந்த
பாசுரங்கள் பாடுதற்கு என்பதனைத்
தெரிவிக்கிறார், ‘இப்படியுள்ள சேர்க்கையாலும்’ என்று தொடங்கும்
வாக்கியத்தால்.
5. அந்யாபதேசம் - உள்ளுறையல்லாத வெளிப்படைப்பொருள். சேர்க்கையால்
அந்யாபதேசம், ‘கருமாணிக்கமலை’,
‘வேய்மருதோளிணை’ என்பவை முதலான
திருப்பதிகங்கள். பிரிவால் அந்யாபதேசம், ‘அஞ்சிறைய மடநாராய்’
என்றது
முதலான திருப்பதிகங்கள்.
6.
‘சில’ என்றது, ‘உயர்வற’, ‘திண்ணன் வீடு’, அணைவது’, ‘ஒன்றுந்தேவும்’
என்னும் நான்கு திருப்பதிகங்களை.
7.
‘சில’ என்றது, ‘பயிலுஞ்சுடரொளி’, ‘ஏறாளும் இறையோனும்’, ‘கண்கள்
சிவந்து’, ‘கருமாணிக்கம்’
என்னும் நான்கு திருப்பதிகங்களை.
|