|
இ
இருக்கும்; 1சில,
அடையும் வழியினைச் சொல்லும்; 2சில, பலத்தைச் சொல்லும்; 3சில,
அடைவதற்குத் தடையாக இருப்பனவற்றைச் சொல்லும்; 4ஏனைய திருப்பாசுரங்கள் இவற்றை
விளக்கிக் கூறுவனவாக இருக்கும். ‘ஆயின், மேல், ‘உறுதிப்பொருளைக்கூறும் பிரபந்தங்களில் முதன்மை
பெற்ற பிரபந்தங்கள்,’ என்று கூறிவைத்து, இங்கு ‘ஐம்பொருள்களைக் கூறுகின்றன’ என்று கூறல் முரண்
ஆகாதோ?’ எனின், ஆகாது; இவற்றில் 5உத்தேசியம், பலம்; அதன் பொருட்டு மற்றும்
உள்ள நான்கு பொருள்களும் கூறப் படுகின்றனவாதலின்.
இவற்றுள், முதல்
பிரபந்தமான திருவிருத்தத்தில், 6எம்பெருமானை அநுபவிப்பதற்கு விரோதியான சம்சார
சம்பந்தத்தை அறுத்துத் தந்தருள வேண்டும் என்று விரும்புகிறார். திருவாசிரியத்தில், 7முத்தர்கட்கு
இனிமையான தன்னுடைய வடிவழகைக் கலம்பக நன்மாலையைப் பணியாக எடுத்துக்காட்டுமாறு போன்று
1.
‘சில’ என்றது, ‘நோற்ற நோன்பு’, ‘ஆராவமுதே’, ‘மானேய்
நோக்கு’, ‘பிறந்தவாறும்’ என்னும் நான்கு
திருப்பதிகங்களை.
2.
‘சில’ என்றது, ‘எம் மா வீடு’, ‘ஒழிவில் காலம்’, ‘நெடுமாற்
கடிமை’, ‘வேய்மரு’ என்னும் நான்கு
திருப்பதிகங்களையும்.
3.
‘சில’ என்றது, ‘வீடுமின் முற்றவும்’, ‘சொன்னால் விரோதம்’, ‘ஒரு
நாயகமாய்’, ‘கொண்ட பெண்டிர்’
என்னும் நான்கு
திருப்பதிகங்களையும்.
4.
‘ஏனைய’ என்றது, மற்றை எண்பது திருப்பதிகங்களையும்.
5.
உத்தேசியம், பலம் என்றது, கைங்கரியத்தை. ‘அதன் பொருட்டு
மற்றும் உள்ள நான்கு பொருள்களும்
கூறப்படுகின்றன’ என்றது,
கைங்கரியத்தைச் செய்யும் ஆன்மாவின் தன்மையும்,
செய்யப்படுகின்ற
இறைவன் தன்மையும், செய்யும் வழியின்
தன்மையும், அதற்குத் தடைகளாக உள்ளவற்றின் தன்மையும்
கூறவேண்டியிருத்தலின், கூறப்படுகின்றன என்றவாறு.
6.
‘இந்நின்ற நீந்மை இனி யாரும் உறாமை’ என்று தொடங்கி,
‘அழுந்தார் பிறப்பாம், பொல்லா
அருவினை மாய வன்சேற்று
அள்ளல் பொய்ந்நிலத்தே’ என்று முடித்து, முதலிலும் முடிவிலும்
சரீர சம்பந்தத்தின்
நீக்கத்தை அருளிச்செய்கையால் இதுவே
திருவிருத்தத்துக்கு முக்கியக் கருத்தாம்.
7.
‘செக்கர் மா முகிலுடுத்து’ என்ற திருப்பாசுரத்தை நோக்கி,
இங்ஙனம் அருளிச்செய்கிறார்.
‘வடிவழகை, என்கிற இடத்தில்
அவயவ சௌந்தரியமும், ஆபரண சௌந்தரியமும் கொள்க.
கலம்பக நன்மாலை
- பலவகைப் பூக்களால் தொடுத்த அழகிய
மாலை. பணியாக - வகுப்பாக; இனிமையாக என்றபடி.
|