|
க
காட்டிக்கொடுக்கக் கண்டு
பூர்ணமாக அநுபவித்தார். பெரிய திருவந்தாதியால், 1எல்லை அற்ற இனியனான எம்பெருமானை
அநுபவிக்கையாலே அதற்குத் தகுதியாக வேட்கை பிறந்து, வேட்கைக்குத் தகுதியாகப் பேசியும் நினைந்தும்
தரிக்கிறார். திருவாய் மொழியில், 2இவருடைய வேட்கைக்குத் தகுதியாக, திருமகள்
1.
‘நற்பூவைப்பூ என்ற வண்ணன்’ என்பது போன்றவைகளை நினைத்து, ‘எல்லை
அற்ற இனியனான எம்பெருமானை’
என்கிறார். ‘அநுபவிக்கையாலே’ என்றது,
அநுபவித்துப் பிரிகையாலே’ என்றபடி. ‘அன்பே, பெருகும்
மிக’ என்றதனை
நோக்கி, ‘அதற்குத் தகுதியாக வேட்கை பிறந்து’ என்கிறார். ‘நாவீன்
தொடைக்கிளவி
யுட்பொதிவோம், இயற்றுவாய் எம்மொடு நீ கூடி’ என்றும்,
‘ஏத்த முயல்’ என்றும், ‘நீகதியா நெஞ்சே
நினை’ என்றும் வருவனவற்றை
நோக்கிப் ‘பேசியும் நினைந்தும் தரிக்கிறார்’ என்கிறார்.
2.
‘இவருடைய வேட்கைக்குத் தகுதியாக’ என்பது முதல் ‘எம் பெருமானைப்
பெற்று முடிக்கிறார்’ என்றது
முடிய, இத்திருவாய் மொழியின் முதல் நூறு
பாசுரங்களின் கருத்தைச் சுருங்க அருளிச்செய்து, அக்கருத்தை
‘அவா அற்று
வீடுபெற்ற’ என்ற ஈற்றுப்பாசுரத்தோடு சேர்த்து முடிக்கிறார்.
இங்கு, ‘இவருடைய வேட்கைக்குத்
தகுதியாக’ என்பதனைப்
பின்வருகின்ற ‘நிர்ஹேதுகமாகக் காட்டியருளக் கண்டு’ என்றதனோடு முடிக்க.
‘திருமகள் கேள்வனாய்’ என்றது முதல் ‘வேறுபட்ட சாதியனுமாய் இருந்து
வைத்து’ என்றது முடிய,
இறைவனுடைய பரத்துவத்தை அருளிச்செய்கிறார்.
‘அடியார்களிடத்து உள்ள’ என்றது முதல் ‘தன்மையனுமாய்’
என்றது முடிய,
அவதாரத்தை அருளிச்செய்கிறார். வாத்ஸல்யம் - பசுவிற்குத் தன்
கன்றினிடத்தில்
தோன்றும் அன்பு. அதாவது, தோஷங்களைக் குணமாகக்
கொள்ளுதற்கு ஏற்றதொரு தன்மை: வத்ஸம் - கன்று.
‘தன்னுடைய
அவதாரங்களிலும்’ என்றது முதல் ‘கோயில்களிலே வந்து நின்றருளியும்’
என்றது முடிய, அர்ச்சாவதாரத்தை
அருளிச்செய்கிறார். ‘இழக்க
வேண்டாதபடி’ என்பதனைப் பின் வருகின்ற ‘கோயில்களிலே வந்து
நின்றருளியும்’
என்பதனோடு முடிக்க. ‘இப்படியுள்ள
சர்வேஸ்வரனாந்தன்மைக்கு ஏகாந்தமான படிகளால் பரிபூர்ணனான
எம்பெருமான்’ என்றும், ‘இப்படியுள்ள அடியார்கட்குத் திருவருள் புரிதற்கு
ஏகாந்தமான படிகளால் பரிபூர்ணனான
எம்பெருமான்’ என்றும் தனித்தனியே
கூட்டுக. ‘திருமகள் கேள்வனாய்’ என்றது முதல் ‘வேறு பட்ட சாதியனுமாய்
இருந்துவைத்து’ என்றது முடிய, சர்வேஸ்வரனாந் தன்மைக்கு
ஏகாந்தமானபடிகள். ‘அடியார்களிடத்து’ என்றது முதல் ‘கோயில்களிலே வந்து
நின்றருளியும்’ என்றது முடிய, அடியார்கட்குத் திருவருள் புரிதற்கு
ஏகாந்தமான
படிகள்.
இனி, இத்திருவாய்மொழியில்
வந்துள்ள ‘உளன் சுடர்மிகு சுருதியுள்’
என்றதனை நோக்கித் ‘திருமகள் கேள்வனாய்’ என்கிறார்.
‘நல முடையவன்’
என்றதனை நோக்கிச் ‘சமஸ்த கல்யாண குணாத்மகனாய்’
|