பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
32

New Page 1

கேள்வனாய்ச் சமஸ்த கல்யாணகுணாத்மகனாய்த் தனக்குத் தகுதியான திவ்விய தேகத்தையுடையனுமாய்த் திவ்விய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனுமாய்ச் சங்க சக்கரம் முதலிய திவ்விய ஆயுதங்களைத் தரித்தவனுமாய்ப் பரமபதத்திலே ஆனந்தமயமான திவ்விய ஆஸ்தான இரத்தின மண்டபத்திலே பெரிய பிராட்டியாரும் தானும் பிராட்டிமாருங்கூடத்திவ்விய சிம்மாசனத்திலே ஏழுலகுந் தனிக்கோல் செல்ல வீற்றிருந்தருளி, அஞ்சத்தகாத இடத்திலும் அச்சத்தால் ஐயுறுகின்ற அயர்வறும் அமரர்களாலே எப்பொழுதும் தொண்டு செய்யப்படுகின்ற திருவடித்தாமரைகளையுடையனாய்க் கொண்டு, அங்கு அங்ஙனம் சென்று கொண்டிருக்க, தன் நினைவாலே மாத்திரம் ஏற்படுகின்ற சொரூபம் ஸ்திதி தொழில் நடத்தல் நடவாமைகளையுடைய தன்னின் வேறுபட்ட எல்லாப்பொருள்களும் தனக்குச் சரீரமாகையாலே அவற்றை அடிமையாக உடையனாய், உயிர்க்கு உயிராக இருப்பதனால் அறிவுப்பொருள் அறிவில்பொருள்களை வியாபித்து அவ்வப்பொருள்களின் குற்றங்களால் தீண்டப்படாமல் இருப்பவனாய், நாராயணன் முதலான பெயர்களைத்தனக்குப் பெயராக உடையனாய், இப்படிப்பட்டவனாக ‘உளன் சுடர்மிகு சுருதியுள்’ என்கிறபடியே உபநிடதங்களால் அறுதியிடப்பட்ட பொருளனுமாய் இப்படி வேறுபட்ட சாதியனுமாய் இருந்து வைத்து

 

  என்கிறார். ‘சுடரடி என்றதனை நோக்கித் ‘திவ்விய தேகத்தையுடையனுமாய்’
  என்கிறார். ‘அந்தாமத்தன்பு’ என்ற திருப்பதிகத்தை நோக்கித் ‘திவ்விய
  ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனுமாய்’ என்கிறார். ‘சங்கு வில் வாள்
  தண்டு சக்கரக் கையற்கு’ என்றதனை நோக்கிச் ‘சங்க சக்கரம் முதலிய
  திவ்விய ஆயுதங்களைத் தரித்தவனுமாய், என்கிறார். ‘அயர்வறும் அமரர்கள்
  அதிபதி’ என்றதனை நோக்கிப் ‘பரமபதத்திலே. . . . . வீற்றிருந்தருளி’
  என்கிறார். ‘மற்று அமரர் ஆட்செய்வார்’ என்றதனை நோக்கி ‘அஞ்சத் தகாத
  இடத்திலும் . . .திருவடித்தாமரைகளையுடையனாய் என்கிறார். முதல்
  திருப்பதிகத்தில் ‘நாமவன்’, ‘அவரவர்’, ‘நின்றனர்’ என்ற பாசுரங்களை
  நோக்கித் ‘தன் நிளைவாலே மாத்திரம். . . . . .எல்லாப் பொருள்களும்’
  என்கிறார். ‘உடல்மிசை உயிர் என’ என்றதனை நோக்கி, ‘எல்லாப்
  பொருள்களும் தனக்குச் சரீரமாகையாலே அவற்றை அடிமையாகவுடைய’
  என்கிறார். ‘புலனொடு ‘புலனலன்’ என்றதனை நோக்கி ‘உயிருக்கு உயிராக
  இருப்பதனால் . . . தீண்டப்படாமலிருப்பவனாய்’ என்கிறார். ‘வண்புகழ்
  நாரணன்’ என்றதனை நோக்கி, ‘நாராயணன் முதலான பெயர்களைத் தனக்குப்
  பெயராக உடையனாய்’ என்கிறார், ‘அளி பொறையாய் நின்ற பரன்’
  என்றதனை நோக்கி, ‘இப்படி வேறுபட்ட சாதியனுமாய் இருந்து வைத்து’
  என்கிறார்.