பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
33

அடியார்களிடத்துள்ள வாத்சல்யத்தாலும் தன்னுடைய மேலான திருவருளாலும் தேவ மனித முதலான சாதியினனாய் வந்து 1திருவவதாரம் செய்யும் தன்மையனுமாய், தன்னுடைய அவதாரத்திலும் உதவப் பெறாத கருவிலே திருவிலாதாரும் இழக்கவேண்டியபடி எல்லாக்குற்றங்களையும் பொருக்கின்றவனாய், பத்திரம் புஷ்பம் முதலியவைகளால் எளிய முறையில் ஆராதிக்கப்படுகின்றவனாய், அடியார்கட்கு மிகவும் பரதந்திரனாய், அவர்களுடைய விருப்பத்துக்குத் தகுதியான உணவு படுக்கை முதலியவைகளையுடையனாய், எல்லாநற்குணங்களாலும் நிறைவுற்றவனான தானே, அடியார்கட்கு எளியவன் ஆவதற்காகக் கோயில்களிலே வந்து நின்றருளியும், இப்படியுள்ள சர்வேஸ்வரனாந் தன்மைக்கும் அடியார்கட்குத் திருவருள் புரிதற்கும் ஏகாந்தமான படிகளால் பரிபூரணனான எம்பெருமான், 2தன்னை நிர்ஹேதுகமாகக் காட்டியருளுக கண்டு அநுபவித்துத் தம்முடைய உலகவாழ்க்கைத் தொடர்பாகிற தடை நீங்கி எம்பெருமானைப் பெற்று முடிக்கிறார்.

    இனிச் சொல்லவேண்டுமவை எல்லாம் அவ்வத்திருவாய் மொழிகள்தோறும் கூறுதும் : ஆங்காங்குக் கண்டுகொள்வது.

    இனி, 3முதல் திருவாய்மொழியில் கூறப்படும் பொருளாவது, பல வித இரத்தினங்களால் நிறைவுற்றதாய் அளவிட முடியாததான

 

1. ‘பத்துடை அடியவர்க்கு’ என்ற திருப்பதிகத்தை நோக்கித் ‘திரு அவதாரம்
  செய்யுந்தன்மையனுமாய்’ என்கிறார். ‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற
  திருப்பதிகத்தை நோக்கி, ‘எல்லாக் குற்றங்களையும் பொறுக்கின்றவனாய்’
  என்கிறார். ‘பரிவதில் ஈசனும்’ என்ற திருப்பதிகத்தை நோக்கிப் ‘பத்திரம்
  புஷ்பம் முதலியவைகளாலே எளியமுறையில் ஆராதிக்கப்படுகின்றவனாய்’
  என்கிறார். ‘ஓடும் புள்ளேறி’ என்ற திருப்பதிகத்தை நோக்கி ‘அடியார்கட்கு
  மிகவும் பரதந்திரனாய்’ என்கிறார். ‘பொருமாநீள்படை’ என்ற திருப்பதிகத்தில்
  ‘நம்பியைத் தென்குறுங்குடி நின்ற’ என்ற திருப்பாசுரத்தை நோக்கி,
  ‘அவர்களுடைய . . . கோயில்களிலே வந்து நின்றருளியும்’ என்கிறார்.

2. ‘வரலாறு ஒன்று இல்லையால்’, ‘வெறிதே அருள்செய்வர்’ என்பனவற்றை
  நோக்கித் ‘தன்னை நிர்ஹேதுகமாகக் காட்டியருளக் கண்டு’ என்கிறார். ‘என்
  அவா அறச் சூழ்ந்தாயே’, ‘அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன்’
  என்பனவற்றை நோக்கித் ‘தம்முடைய உலக வாழ்க்கைத் தொடர்பாகிற தடை
  நீங்கி எம்பெருமானைப் பெற்று முடிக்கிறார்’ என்கிறார்.

3. ‘முதல் திருவாய்மொழியில்’ என்றது, ‘உயர்வற உயர்நலம்’ என்று தொடங்கும்
  முதல் திருப்பதிகத்தை. முதற்பதிகமானது, திருவாய் மொழியாகிய இந்நூலின்
  சுருக்கம் என்று திருவுள்ளம்பற்றி அதற்குத் தக அருளிச்செய்கிறார் ‘பலவித
  இரத்தினங்களால் நிறைவுற்றதாய்’ என்று தொடங்கி.