ஏழ
ஏழாந்திருவாய்மொழி -
‘பிறவித்துயாற’
முன்னுரை
மேல் திருவாய்மொழியில்
‘எளிய முறையில் ஆராதிக்கத் தக்கவன் இறைவன்,’ என்றார்; ‘அவ்வாராதனையானது இன்ப மயமாய்
இருக்கும்,’ என்கிறார் இத்திருவாய்மொழியில். 1திருமகள் கேள்வனாய், எல்லா நற்குணங்கட்கும்
கொள்கலனாய், எல்லா ஆத்துமாக்களுக்கும் சேஷியாய், எல்லை இல்லாத ஆனந்தத்தையுடையவனாய்
2‘மேற்கூறிய இறைவன் தன்னைக் கிட்டினாரையுந் தான் சந்தோஷிப்பிக்கிறான்,’ என்கிறபடியே,
தன்னைக் கிட்டினாரையும் ஆனந்திப்பிக்கக் கடவனாய் இருப்பவன் இறைவன் ஆதலின், அவனுடைய ஆராதனையானது
இன்ப மயமாக இருக்கும் என்கிறார். ‘நன்று; இறைவனிடத்தில் அனுபவிக்கும் அனுபவம் அன்றோ இன்ப
மயமாய் இருக்கும்? அவனை ஆராதிக்கும் ஆராதனையும் இன்ப மயமாய் இருக்குமோ?’ எனின், மோட்சதசையில்
அனுபவம் இனிது ஆகிறதும் அவனைப் பற்றி வருகையாலேயன்றோ? அப்படியே, ஆராதனையும் அவனைப்பற்றி
வருகையாலே போக ரூபமாய் இருக்கும் இதனால், 3இறைவனுடைய ஆராதனையானது இதற்கு இட்டுப்
பிறவாத சர்வேஸ்வரனும் ஆசைப்படும்படி போக ரூபமாய் இருப்பது ஒன்று என்று தெரிவித்தபடி.
4‘பகைவர்களை
அழிக்கின்ற அருச்சுனா, வழிபட்டு வணங்குதலாகிய இந்தத் தர்மத்தில் அன்புடன் கூடின முயற்சி இல்லாதவர்கள்
செய்த குற்றங்கள் அத்தனையும் பொறுத்து அவர்களை நல்வழியிற்
1. இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘பின்னை நெடும்பணைத்தோள்
மகிழ்பீடுடை முழு முதலான்’ என்றதனை
நோக்கித் ‘திருமகள் கேள்வனாய்’
என்கிறார். ‘நிகரில் அவன் புகழ்’ என்றதனை நோக்கி,
‘எல்லா
நற்குணங்கட்கும் கொள்கலனாய்’ என்கிறார். ‘உய்யக்கொள்கின்ற நாதன்’
என்றதனை நோக்கி,
‘எல்லா ஆத்துமாக்களுக்கும் சேஷியாய்’ என்கிறார்.
‘எவர்க்கும் நலத்தாலுயர்ந்துயர்ந்து’ என்றதனை
நோக்கி, ‘எல்லை இல்லாத
ஆனந்தத்தை உடையனாய்’ என்கிறார்.
2. ஆனந்தவல்லி, 7.
3. ‘இறைவனுடைய ஆராதனையானது’ என்று தொடங்கும் வாக்கியத்தால்,
ஆராதனை செய்வதால் உண்டாகும் இன்பத்தினது
முடிவின் எல்லையைக்
காட்டுகின்றார்.
4.
ஸ்ரீ கீதை. 9 : 3. ‘பகைவர்களை’ என்று தொடங்கும் பொருளையுடைய
சுலோகமும், ‘இந்த ஞானமானது’ என்று
தொடங்கும் பொருளையுடைய
சுலோகமும், இறைவனுடைய ஆராதனையானது அவனாலும் விரும்பப் படும்
தகையது
என்பதற்குக் காட்டப்படும் மேற்கோள்கள்.
|