ப
பிறவாரே-ஆயிரத்திலும்
இந்தப் பத்தையும் கற்க வல்லார் பிறவார். பிறக்கை சுட்டி அன்றே ‘மாதாவைப் பேணுதல் அழகிது’
என்னுமாறு போன்று, ‘பகவானை அடைதல் எளிது’ என்று உபதேசிக்கிறார்? இத்திருவாய்மொழியைக் கற்க
வல்லார்கள் உபதேசம் இல்லாமலே சம்சார சம்பந்தம் அற்றுப் பகவானுடைய அனுபவமே யாத்திரையாம்படி
இருக்கிறவர்களோடே கூடி அனுபவிக்கப்பெறுவர்கள் ஆதலின், ‘ஓதவல்லார் பிறவார்’ என்கிறார்.
முதற்பாட்டில்,
‘இறைவனைப் பற்றுகின்றவர்கட்குப் பொருள் நியதி இன்று,’ என்றார்; இரண்டாம் பாட்டில்,
‘அதிகாரி நியதி இல்லை,’ என்றார்; மூன்றாம் பாட்டில் தம்முடைய முக்கரணங்களும் பகவானிடத்தில்
அன்பு கொண்டபடியை அருளிச்செய்தார்; நான்காம் பாட்டில், ‘நித்தியசூரிகளைப் போன்று அதுவே
யாத்திரை ஆயிற்று,’ என்றார்; ஐந்தாம் பாட்டில், ‘தன்னையே பலமாகப் பற்றினார்க்கு அவன்
எல்லை இல்லாத இனியன்,’ என்றார்; ஆறாம் பாட்டில், ‘இப்படி இனியன் ஆனவனை விட்டு வேறு பலத்தைக்
கொண்டு அகலுவதே!’ என்று தேவர்களை நிந்தித்தார்; ஏழாம் பாட்டில், ‘இறைவனையே பலமாகப் பற்றினார்க்குக்
காலத்தைப் போக்குதல் இன்ன வகை’ என்றார்; எட்டாம் பாட்டில், ‘இறைவனைப் பற்றுதற்குத்
தடையாக உள்ளனவற்றையும் அவன் தானே போக்குவான்,’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘இது கூடுமோ!’
என்று ஐயம் உண்டாக, ‘வெறும் அவன் படியையோ பார்ப்பது? அருகு இருப்பார் படியையும் பார்க்க வேண்டாவோ?’
என்றார்; பத்தாம் பாட்டில், ‘இவர்கள் விரோதிகளைப் போக்குவது எத்துணைக் காலத்தில்?’ என்ன,
கணநேரத்திலே’ என்றார்; முடிவில், இத்திருவாய்மொழியைக் கற்கவே பிறக்க வேண்டா,’ என்றார்
(1)
திருவாய்மொழி
நூற்றந்தாதி
பரிவதில்ஈ சன்படியைப்
பண்புடனே பேசி,
‘அரியன்அலன்
ஆரா தனைக்‘கென் - றுரிமையுடன்
ஓதியருள் மாறன்
ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள்
பிறப்பு.
(6)
ஆழ்வார்
எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.
|