பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
278

New Page 1

‘ஒருதலை பிறவி, ஒருதலை மரணம், நடுவே 1ஆதி வியாதிகள்; இவ்வுயிர்கள் செய்த குற்றங்களைப் பார்க்கக் கடவதோ! குற்றம் கண்டுவிடில் உலகம் முழுதையும் விடவேண்டாவோ! பொறுத்தருளீர்,’ என்றால், ‘அவளுக்காகப் பொறுத்தோம்’ என்னுமித்தனை.

(10)

66

        மாதவன் பாற்சட கோபன்
        தீதவம் இன்றி உரைத்த
        ஏதமில் ஆயிரத்து இப்பத்து
        ஓதவல் லார்பிற வாரே.


    பொ-ரை :
ஸ்ரீசடகோபராலே, திருமகள் கணவனிடத்தில் தீதும் அவமும் இல்லாத தன்மையை எடுத்து உரைக்கப்பட்ட குற்றம் இல்லாத ஆயிரம் திருப்பாசுரங்களுள். இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்று வல்லவர்கள், மீண்டும் வந்து இவ்வுலகிற்பிறக்க மாட்டார்கள்,’ என்பதாம்.

    வி-கு : ‘உரைத்த’ என்னும் எச்சத்தை ‘இப்பத்து’ என்னும் பெயருடன் முடிக்க.

    ஈடு : முடிவில், ‘இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர் சம்சாரத்தில் வந்து பிறவார்,’ என்கிறார்.

    மாதவன்பால் சடகோபன் தீது அவம் இன்றி உரைத்த ஏதம் இல் ஆயிரத்து இப்பத்து-இதனை, ‘தீது இல் மாதவன்பால், அவம் இன்றி இருக்கின்ற சடகோபன் உரைத்த, ஏதம் இல் ஆயிரம்’ என்று சொற்களைக் கொண்டு கூட்டி, பிரபந்தத் தலைவன் குற்றம் இல்லாதவன் என்றும், பிரபந்தத்தை அருளிச் செய்தவர் குற்றம் இல்லாதவர் என்றும், பிரபந்தம் குற்றம் இல்லாதது என்று பொருள் அருளிச்செய்தனர் முன்னைய பெரியோர். பட்டர், அவ்வாறு அன்றி, ‘ஏதம் இல் ஆயிரம்’ என்று பிரபந்த லக்ஷணம் கூறிய போதே, முக்குற்றங்கள் இல்லாமையும் சொல்லியதாம்; இனி, தீதும் அவமும் என்பன செய்வன என்?’ என்னில், ‘சடகோபன் மாதவன் பால் தீது அவம் இன்றி உரைத்த’ என்று கூட்டிப் பொருள் கொள்க,’ என்று அருளிச்செய்தார். அதாவது, தீதாவது, ‘நான் திருமகள் கேள்வன் அல்லனோ!’ என்று தன் மேன்மையைப் பார்த்துக் கடக்க இருக்குமது. அவமாவது, ‘அடைகின்றவன் நித்திய சம்காரி அல்லனோ!’ என்று இவன் சிறுமையைப் பார்த்துக் கைவிடுமது. இவை இல்லாமையைச் சொன்ன இப்பத்து என்றபடி. ஓத வல்லார்

 

1. ஆதி வியாதி-மனத்தின் நோய் உடலின் நோய்கள்.