பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
277

65

65

        கடிவார் தீய வினைகள்
        நொடியா ருமள வைக்கண்
        கொடியா அடுபுள் உயர்த்த
        வடிவார் மாதவ னாரே.


    பொ-ரை :
பகைவரைக் கொல்லும் கருடப்பறவையைக் கொடியாக உயர்த்திய, அழகு பொருந்திய பெரிய பிராட்டியாருக்குக் கணவர்; ஆதலால், நொடிக்கும் அளவைக்குள் தீய வினைகளை எல்லாம் போக்குவார்.

    வி-கு :
நொடி - நொடித்தல்; அதாவது, கையின் இரண்டு விரல்களின் நுனிகளையும் சேர்த்துத் தெறித்தல் : அது, இங்குந் தெறித்தலால் உண்டாகும் ஒலிக்கு ஆய், அவ்வொலி அது நிகழ்கின்ற காலத்திற்கு ஆயிற்று. ‘கண்ணிமை நொடிஎன அவ்வே மாத்திரை,’ என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். அடுபுள்-வினைத்தொகை.

    ஈடு : பத்தாம் பாட்டு. ‘இப்படி அவனும் அவளும் குற்றங்களைப் போக்குவது எத்தனை காலம் கூடி?’ என்னில், ‘தன் திருவடிகளிலே தலை சாய்த்த அளவிலே’ என்கிறார்.

    கடிவார் தீய வினைகள் - காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையும் தன்னால் போக்கிக்கொள்ள ஒண்ணாத கொடிய பாவங்களை எல்லாம் போக்குவார். ‘வழி நின்ற வல்வினை மாள்வித்து’ என்ற இடத்தில், ‘பற்றின அளவில் பாவங்களைப் போக்குவான்,’ என்றார்; ‘இருமை வினை கடிவார்’ என்ற இடத்தில், ‘அவன் தானானதற்கு மேல் பிராட்டியும் உடன் இருக்கையாலே போக்குவான்,’ என்றார். ‘எவ்வளவில் போக்குவான்?’ என்னில், ‘கணநேரத்திலே’ என்கிறார் இதில். நொடி ஆரும் அளவைக்கண் - நொடி நிறையும் அளவிலே கொடியா அடு புள் உயர்த்த வடிவார்-தூரத்தில் கண்ட அளவில் 1பகைவர்கள் மண் உண்ணும்படியான பெரிய திருவடியைக் கொடியாக எடுக்கையைச் சுபாவமாக உடையவர். இனி, ‘வடிவார் என்பதற்கு ‘அழகிய வடிவையுடையவர்’ என்று கூறலுமாம். இனி, இதனைப் பிராட்டிக்கு அடைமொழியாக்கி, வடிவிலே எழுந்தருளியிருக்கின்ற’ என்று பொருள் கூறலும் ஒன்று. மாதவனார்-பிராட்டி அருகே இருந்து போக்குவிக்க ஆயிற்றுப்போக்குவது. அதாவது,

 

1. ‘எல்எடுத்த படை இந்திராதியர் உனக்கு இடைந்து உயிர் கொடு ஏகுவார்,
  புல் எடுத்தவர்கள் அல்லம்’

(கம்ப. யுத். 2026.)

      ‘விற்கவ்வு வாளி அடல்ஐவர் மீது விடஅஞ்சி வீரர் எதிரே,
  புற்கவ்வுமாகில்’ வில்லிபா.

(ஒன்பதாம் போர்ச். 5.)

  என்பன இங்கு ஒப்பு நோக்கத்தக்கன.