த
தசையில் ‘சுடர்விளக்கந்
தலைப்பெய்வார்’ என்கிறது என்? சம்சார தசையில் அதற்கு அச்சுடர் விளக்கம் இல்லையோ?’ எனின்,
சம்சார தசையில் கர்மம் அடியாக வரக்கூடிய குறைவு உண்டு; மோட்ச தசையில் அது இன்று ஆதலின்,
மலர்ந்து தோன்றும்; அதனை நோக்கி அங்ஙனம் அருளிச்செய்கிறார் ஆக, ‘பிறவியினது எல்லாத்
துன்பங்களும் போகவேண்டும்’ என்று ஆன்ம ஞானத்திலே ஊன்ற நின்று, பிரகிருதித் தொடர்பினின்று
விடுப்பட்டதான ஆத்தும சொரூபத்தை அடைய வேண்டும் என்று இருப்பவர்கள் என்பது பொருளாம். பிறவித்துயர்
அற ஞானத்துள் நிற்றல், காரணம்; துறவிச் சுடர் விளக்கம் தலைப்பெய்தல். காரியம்.
அறவனை - அவர்கள்
படியையும், காரியம், பலன் கொடுக்கின்றவன் படியையும் பார்த்து, ‘என்ன பரம உதாரனோ!’
என்கிறார்; ஒருவன் விரும்பும் பயன் யாதாயினும், அதனைப் பெறுவற்குத் தன்னை விரும்பும் அத்தனையே
அவன் வேண்டுகின்றான் என்றபடி. ‘எங்களுக்கு நீ வேண்டா; சிறிய பயனே அமையும்,’ என்று இருக்கிறவர்களுக்கும்
அதனைக் கொடுத்துவிடுவதே! என்ன தார்மிகனோ!’ என்கிறார். ஆழிப்படை அந்தணனை-ஆத்தும
அனுபவ விரோதியைப் போக்கைக்குக் கருவியான திருச்சக்கரத்தைக் கையிலேயுடையவன். அந்தணன்-பிராமணன்.
சாணிச்சாற்றைப் போன்று ‘சுத்தன்’ என்று கொண்டார்கள் இத்தனை; இனிமையில் நெஞ்சு சென்றது
இல்லை. ‘சுத்தி குணத்தோடு கூடினவன்’ என்று ஆயிற்று அவர்கள் நினைப்பது. ‘கையுந்திருவாழியுமான
அழகைக் கண்டால் அதிலே கால் தாழாதே, தங்கள் பிரயோஜனத்துக்கு உறுப்பான சுத்தி மாத்திரத்தையே
பற்றுவதே!’ என்கிறார். மறவியை இன்றி மனத்து வைப்பாரே - அவனுடைய இனிமையையுங் கண்டு வைத்து,
தங்கள் யுருஷார்த்தத்தை மறவாதே அதனைப் பெறுதற்கு அவனை அடைகின்றார்கள். ‘மறவியை இன்றி’
என்று, அவர்தம் செயலுக்கு இரங்கும் இவர் மறப்பரோ?’ எனின், இவர்க்குக் கையுந்திருவாழியுமான
அழகைக் கண்டால் முன் அடி தோற்றாது; 1‘சக்கரத்து அண்ணலே’ என்றால்
பின்னைத் தரைப்படும் இத்தனை அன்றோ இவர்?’ திருமங்கை மன்னனும், 2‘ஆழியொடும்,
பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை
1. திருவாய். 4. 7 : 10.
‘தரைப்படுமித்தனையன்றோ’
என்றது, மோஹித்துக் கீழே விழுவார் என்றபடி.
2.
பெரிய திருமொழி. 10. 10 : 9.
|